Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்ன அண்ணா.. என்கிட்ட இப்படி கேட்கலாமா.. தன்னை அணுகிய முன்னணி இயக்குனருக்கு பஹத் பாசில் சொன்ன...

என்ன அண்ணா.. என்கிட்ட இப்படி கேட்கலாமா.. தன்னை அணுகிய முன்னணி இயக்குனருக்கு பஹத் பாசில் சொன்ன பதில் என்ன.?

திரையுலகில் நடிப்பு அரசன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பஹத் பாசில். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தனது யதார்த்த நடிப்பாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர். வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். மலையாளத்தில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இவரது நடிப்பிற்காகவே வெற்றி பெற்றன என்றால் அது மிகையாகாது.

- Advertisement -

வேலைக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்தார் பஹத். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இறுதியில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் மிரட்டும் ஆதிக்க ஜாதி வில்லனாக ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரமானது திரையரங்குகளில் கொண்டாடப்பட்டதை விட ஓடிடி தளத்தில் வெளியான போது மிகவும் ட்ரெண்டிங் ஆக்கி அந்த கதாபாத்திரத்தை கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக ஜாதி பாடல்களை வைத்து ரீல்ஸ் உருவாக்கி டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ட்ரெண்டிங் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் ரத்தினவேலு கேரக்டரை தனது கவர் புகைப்படமாக வைத்திருந்த பகத் பாசில் அதனையும் நீக்கிவிட்டார். மாரி செல்வராஜ் அந்த கேரக்டரை எதற்கு உருவாக்கினாரோ அதற்கு அப்படியே நேர் எதிராக சமூக வலைதளங்களில் ரத்தினவேலு கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

இது பகத் பாஸில் என்ற நடிகனுக்கு மிகப்பெரிய வெற்றி என்றாலும் அந்த கேரக்டர் கொண்டாடப்படுவது மிகப்பெரிய சமூக தீமையை உருவாக்கும் என்பதை அனைவருமே அறிந்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன்ஜி ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவது தொடர்பாக பகத் பாசிலை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது .

- Advertisement -

மோகன்ஜி ரத்தினவேலு என்ற பெயரிலேயே ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக பகத் பாசிலை அணுகி இருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பகத் பாசில் மறுத்துவிட்டாராம் . இந்த செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்காகி இருக்கிறது. ரத்தினவேலு கேரக்டர் ஏற்படுத்திய தாக்கத்தை அறுவடை செய்ய முயன்று இருக்கிறார் மோகன் ஜி. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

Most Popular