சினிமா

ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பட்டியல் ! ராஜமவுலியின் RRR பாடல் இடம்பிடிப்பு !

இந்திய திரை உலகில் முன்னணி இயக்குனராக இருந்து கொண்டிருப்பவர் ராஜமௌலி . இவர் ‘மகதீரா’,  ‘பாகுபலி’ ‘பாகுபலி ரிட்டன்ஸ்’, ‘நான் ஈ’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற வெற்றி படங்களை தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி பட  உலகிற்கு கொடுத்தவர். இவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட  ‘ஆர் ஆர் ஆர்’ படம் ஒன் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த படமானது 2023 ஆம் வருடம் மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஆஸ்கார் விருதுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவிலிருந்து  குஜராத் மொழிப்படமான ‘சோ’ என்ற படம்  தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, எந்த வகையிலாவது ஆஸ்கார் விருதுகளில் தனது படத்தை வெளியிடராஜமௌலி முயற்சித்து வந்தார். இதற்காக பல்வேறு விருது வழங்கும்  நிகழ்ச்சிகளுக்கும் அந்த படத்தை தொடர்ந்து அனுப்பி வந்தார் .

Advertisement

இந்நிலையில் புதிய யுக்தியாக  ஆஸ்கரின் ஓப்பன் கேட்டகிரி பிரிவான  உங்களின் பார்வைக்கு என்ற விளம்பரத்தின் மூலம்  சர்வதேச திரைத்துறையைச் சார்ந்த நபர்களுக்கு அந்த திரைப்படத்தை திரையிட்டு காட்டி வந்தார். மேலும் ஆஸ்கார் நாமினேஷனுக்காக அந்தப் படத்தை 15 பிரிவுகளின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தார் .

இதற்கு கைமேல் பலனளிக்கும் விதமாக  ஆஸ்கரின்  தேர்வு  பட்டியலில்  ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் தேர்வாகியுள்ளது. எம்.எம்.கீரவாணி  இசையில் உருவான இந்த பாடல் இந்திய அளவில் ட்ரெண்டானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ திரைப்படத்தின் பாடல்களை அடுத்து ஒரு இந்திய பாடல் ஆனது ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top