Thursday, September 18, 2025
- Advertisement -
Homeசினிமா"ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாத்தி படத்தின் புதிய அப்டேட்"!

“ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாத்தி படத்தின் புதிய அப்டேட்”!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த வருடத்தில் தனுசுக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படம் மட்டுமே ஓரளவு வெற்றியை தந்தது. தீபாவளிக்கு வெளியான அவரது நானே வருவேன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

- Advertisement -

இதனால் வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக உழைத்து வருகிறார் தனுஷ். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் வார்த்தை படம் படப்பிடிப்பு வேலைகள் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் முடிந்து பிப்ரவரி 17 தேதி திரைக்கு வர இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .

இத்திரைப்படத்தில் தனுசுடன் சமித்த?? மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சாய் குமார் சமுத்திரக்கனி ஆடுகளம் நரேன் இளவரசு உள்ளிட்டோ ரூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை யுவராஜ் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் செய்திருக்கின்றனர். படத்தின் எடிட்டிங் பணிகளை நவீன் நூலி மேற்கொண்டு இருக்கிறார். இத்திரைப்படத்தை தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் இந்த படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படம் இறுதிக்கட்டை எடிட்டிங் பணிகள் முடிந்து இரண்டு மணி நேரம் மற்றும் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் வந்திருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் நீளம் என்ன என்பது தணிக்கை குழுவின் அறிக்கைக்கு பின்பு தான் உறுதியாக கூற முடியும் என படத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியர் போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார். கொடி படத்திலிருந்து தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நானே வருவேன் தோல்விக்கு பிறகு மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனுஷின் இந்த வார்த்தை படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Most Popular