சினிமா

இயக்குனர் செய்த பிராடுதனம்!-இரண்டு வருடங்கள் கழித்து அறிக்கை விட்ட தயாரிப்பாளர்!

2021 ஆம் ஆண்டு ஹாரர் த்ரில்லர் ஜெனரில் வெளியான திரைப்படம்  லிஃப்ட் . இந்தப் படமானது டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி  கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அறிமுக இயக்குனரான வினித் குமார் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கவின் மற்றும் அம்ரிதா  ஆகியோர் நடித்திருந்தனர். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருந்த இந்த திரைப்படமானது  ஹாட் ஸ்டார் ஓடிடி இல் நேரடியாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் இந்த திரைப்படத்திற்கான விமர்சனங்கள்  கலவையாக இருந்தன.

Advertisement

இந்தத் திரைப்படத்தினை  இக்கா என்டர்டைன்மெண்ட் சார்பாக ஹெப்சி என்பவர்  தயாரித்திருந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த  கவினுக்கு இந்தத் திரைப்படம் ஒரு  மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய திரைப்படமாக இருந்தாலும்  ஐடி துறையில் நடக்கும் அரசியல் மற்றும் அதில் இருக்கும் சிக்கல்களை பற்றி இந்தத் திரைப்படம் விரிவாக பேசியிருக்கும். ஐடி கம்பெனியில் இருக்கும் அரசியலால்  தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் அவர்களது பணிக்கு வரும் ஆட்களை  தங்களது அமானுஷ்ய சக்திகளின் மூலம் எவ்வாறு துன்புறுத்துகின்றன.அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை. ஒரு லிப்டிலேயே படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித  அனுபவத்தை கொடுத்தது.

இந்நிலையில் இந்த படம் வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து  இப்படத்தோடு தொடர்புடைய ஒரு புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தின் இயக்குனர் வினித்குமார் வரப்பிரசாத் தனக்கு கொடுத்த அதிகாரங்களை பயன்படுத்தி  பண மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதுதான் அந்த சர்ச்சை. இது தொடர்பாக இக்கா  என்டர்டைன்மெண்ட்ஸ்  உரிமையாளர் ஹெப்சி அதிகாரப்பூர்வமாக அறிக்கையினை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

அந்த அறிக்கையின்படி பட தயாரிப்பு பணிகளின் போது  தன்னுடைய உடல்நிலை சரியில்லாதகாரணத்தினால்  அவர் இயக்குனருக்கு முழு அதிகாரம் வழங்கியதாகவும்  அந்த அதிகாரங்களை பயன்படுத்தி சாலமன் வினித் குமார் என்ற வினித் குமார் வரப்பிரசாத் பண மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கா என்டர்டெயின்மெண்ட் சார்பாக ஹெப்சி அவர்களுடைய அனுமதியின்றி வினித் குமார் வரப்பிரசாதை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும்  அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

படம் வந்து வெற்றிகரமாக ஓடி இரண்டு வருடங்கள் கழித்து  பண மோசடி தொடர்பாக இப்படி ஒரு அறிக்கை வந்திருப்பது  கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top