Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவெறித்தனம் ஸ்டில்.. லியோ படபிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கெளதம் மேனன்

வெறித்தனம் ஸ்டில்.. லியோ படபிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கெளதம் மேனன்

- Advertisement -

நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய படம் என்றால் அது லியோ தான். விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் வெறித்தனமான மியூசிக்கை போட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவில் அனிருத் போட்ட ஐ அம் ஃபயர் புரூப் என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது.தெலுங்கு சினிமாவுக்கு பாகுபலி கன்னட சினிமாவுக்கு கே ஜி எஃப் போன்று தமிழ் சினிமாவுக்கு லியோ திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் பட குழு இரவு பகலாக தீவிர படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் குளிருக்கு இதமாக நெருப்பை மூட்டி படக்குழுவினர் குளிர் காயும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் ,மலையாள நடிகர் தாமஸ் மாத்யூ ஆகியோருடன் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளார். இதில் நடிகர் விஜய் கலைந்த முடிகளுடன் வெள்ளை தாடி வைத்து வெறித்தனமாக படக்குழுவினருடன் குளிர் காய்ந்து கொண்டு உள்ளார்.

- Advertisement -

இந்தப் படத்தின் நடித்து வரும் கேரள நடிகரான தாமஸ் மேத்யூ அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் நெறியாளர் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்கிறாரா என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்த படத்தில் பகத் உள்ளாரா இல்லையா என்று தமக்குத் தெரியாது என்றும் ,அப்படி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். இது விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக கண்டிப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

Most Popular