Friday, December 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரஜினியின் நலனுக்காக ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் புதிய திட்டம்.. ஜூலையில் படப்பிடிப்பு

ரஜினியின் நலனுக்காக ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் புதிய திட்டம்.. ஜூலையில் படப்பிடிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 73 வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பது பெரிய விஷயம். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் பிசிரு தட்டாமல் சிறப்பாக செய்துக் கொண்டுள்ளார். இன்னுமும் இந்த குதிரை ஓடிக் கொண்டே தான் இருக்கும் என்பதற்கு இணங்க அவர் சினிமாவில் பயணித்து வருகிறார்.

- Advertisement -

அண்மையில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கூலி படத்துக்கு தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கூலி திரைப்படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான முதற் கட்டப் பணிகளை அவர் பார்த்து வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினியின் நலனுக்காக இயக்குனர் லோகேஷ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதாவது, ரஜினி கடந்த மாதம் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு பல்வேறு சண்டைக் காட்சிகள் இருந்தன. அதுமட்டுமில்லாமல் அனைத்து ஆக்சன் காட்சிகளும் வெவ்வேறு இடங்களில் ஷூட் செய்யப்பட்டதால் ரஜினி மிகவும் களைத்துப் போயுள்ளார்.

- Advertisement -

இதனால் தான் ஜூன் மாதம் துவங்கவிருந்த கூலி பட ஷூட்டிங் ஜூலை மாதத்துக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே இதற்கு முன்பு அவர் ஆக்சன் காட்சிகள் செய்வதில் சற்று சிரமப்பட்டார். இந்த வயதில் உடலை வருத்திக் கொண்டு செய்வது பெரிய கஷ்டம் தான். இதனால் தன் படத்தில் அவருக்கு இவ்வாறு அசதிகளைக் கொடுக்கக் கூடாது என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

கூலி படத்தின் ஷூட்டிங்கை இரண்டே இடங்களில் முழுவதுமாக முடித்துவிட அவர் திட்டம் போட்டுள்ளார். லோகேஷ் படமென்றாலே ஆக்சன் தான், அதை மாற்ற முடியாது. மாறாக பயணம் செய்வதை தவிர்த்துள்ளார். சென்னை பிரசாத் லாப் மற்றும் ஹைதரபாத் இரண்டே இடங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்கின்றனர். ஜூலை மாதம் ஷூட்டிங் ஆரம்பம்.

Most Popular