Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாபிரம்மாண்டமான வாரிசு இசை வெளியீட்டு விழா ! யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா ?

பிரம்மாண்டமான வாரிசு இசை வெளியீட்டு விழா ! யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா ?

தளபதி விஜய் மற்றும் ரஷ்மிக்கா மந்தானா நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்க இருக்கிறது . தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று வாரிசு இந்தப் படமானது வருகின்ற ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

- Advertisement -

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் தமன்னா அவர்கள் நேரலையில் பாடல்களை இசை அமைத்து பாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரை உலகத்திலிருந்தும் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் கிங் கான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான் மற்றும் தமிழ் திரை உலகின் உலக நாயகன் கமல்ஹாசன் இவர்களுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் . இந்த நிகழ்ச்சியில் தளபதி தன்னுடைய வழக்கமான குட்டி ஸ்டோரி உடன் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார் .

- Advertisement -

மேலும் தளபதிக்கு தெறி மெர்சல் மற்றும் பியில் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயும் தளபதி 67 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிகழ்ச்சியில் படத்தின் தளபதியின் இன்ட்ரோ பாடலை இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் பாடியுள்ளார் . அவரே இந்த பாடல் வெளியிட்ட போது அந்தப் பாடலை நேரலையில் பாடுவார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் போது படத்தில் இடம் பெற்று இருக்கின்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்காக விழா மேடையில் பாடப்படுகின்றன . முதலாவதாக படத்தின் தளபதியின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் பாடுவார் .

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் வெற்றி நடை போட்ட பாடல் ஆன ரஞ்சிதமே பாடலும் மேடையில் பாடப்படும் .

சோல் ஆப் வாரிசு பாடல் சித் ஸ்ரீராம் இன் குரல்களில் பாடப்படும் .

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக படத்தில் இடம் பெற்றிருக்கின்ற ஒரு காதல் பாடலை ஜோனிட்டா காந்தியும் சித் ஸ்ரீராமும் பாடுவார்கள் .

இதனைத் தொடர்ந்து படத்தின் பிஜிஎம் ஆனா ஆல்தோட்ட பூபதி இசையும் இசையமைப்பாளர் தமன் விழா மேடையில் அறிமுகப்படுத்த உள்ளார் .

Most Popular