சினிமா

“துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் வாரிசு நடிகரின் ஆடியோ ரிலீஸ் நிகழ்வு” – பல வருட நன்றி கடன் தயாரிப்பாளர் நிகழ்ச்சி!

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகர் ஆன சாந்தனு 1998 ஆம் ஆண்டு வெளியான வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அம்மாவின் கைபேசி, கண்டேன், ஆயிரம் விளக்கு, கசடதபற உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது நடிப்பில் இராவணக் கோட்டம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறிமுகப்பட்ட விக்ரம் சுகுமார் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சாந்தனுவுடன் கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, அருள்தாஸ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை துபாயை சார்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் கண்ணன் ரவி குரூப்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கிறார்.

Advertisement

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷ்சன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகின்ற மே மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்து மிகப்பெரிய இடத்திற்கு சென்றாலும் சாந்தனு பாக்யராஜ் ஒரு பிரேக்கிற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அது இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அவரிடமும் அவரது ரசிகர்களிடமும் இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாயில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. படத்தை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோக்களின் பட விழாவிற்கு இணையாக இராவண கோட்டம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தயிருப்பதாக அறிவித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ள அவர் பாக்கியராஜிற்கு தான் பட்ட நன்றி கடனாக இதை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இது பற்றி கூறியிருக்கும் அவர் “தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அந்தப் பெண்ணும் இவரும் காவல் நிலையம் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் வீட்டின் எதிர்பால் காவல்துறையும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாக்யராஜ் காவல்துறையை தொடர்பு கொண்டு இவர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு துபாய் சென்ற இவர் இன்று மிகப்பெரிய செல்வந்தராக தனது தொழில் மூலம் உயர்ந்திருக்கிறார். அன்று பாக்யராஜுக்கு தான் பட்ட நன்றி கடனாக அவரது மகனின் திரைப்படத்தினை மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய ஹீரோக்களுக்கு இணையாக சாந்தனு பாக்யராஜின் இராவணக் கோட்டம் திரைப்படத்தின் ஆடியோ விழா துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top