Saturday, July 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதியேட்டரில் வந்து தமிழ் படங்களைப் பார்க்க மறுப்பதற்கு ஓடிடி தளங்கள் தான் காரணம்.. பி.டி.சார் பட...

தியேட்டரில் வந்து தமிழ் படங்களைப் பார்க்க மறுப்பதற்கு ஓடிடி தளங்கள் தான் காரணம்.. பி.டி.சார் பட நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா பேச்சு

கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியாகியுள்ள பி.டி.சார் அண்மையில் வெளியானது. நகைச்சுவையாகவும் அதே சமயம் பெண்கள் பற்றி சீரியசான கருத்தை சிறப்பாக எடுத்துரைப்பதாகவும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் புரொமோஷன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேசியுள்ளார்கள்.

- Advertisement -

இதில் ஓடிடி தளங்களால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துள்ளதாக நடிகர் ஹிப் ஹாப் தமிழா தன் கருத்தை முன்வைத்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா கூறியதாவது, ” ஓடிடி தளம் படங்களுக்கு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. இதனால் படம் திரையரங்கில் ஓடி முடித்த பிறகும் ஓடிடியில் மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதே சமயம் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக்கூடியவர்கள் இப்போதெல்லாம் ஓடிடியில் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலைக்கு போய்யுள்ளார்கள். “

” இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்பு தான் என்ன மாதிரியான நிலைமை என்று ” என்றார் ஹிப் ஹாப் தமிழா. இவர் கூறியது ஒரு பக்கம் சரியாக இருந்தாலும் தற்போது சிறிய படங்களுக்கு இத்தளங்கள் உபயோகமாக இருப்பது தான் மிகவும் நல்ல விஷயமாக கருத வேண்டும்.

- Advertisement -

நடப்பு சினிமாத் துறையில் ஒரு படத்தின் வெற்றி என்பது திரையரங்கோடு முடிவதில்லை. ஓடிடியிலும் அதற்க்கு பங்காற்றுகிறது. திரையரங்கில் கொண்டாடப்பட்ட சில படங்கள் ஓடிடியில் கடுமையான விமர்சனங்களையும், தியேட்டரில் ஓடாத சில படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்பையும் கூட பெறுகிறது.

- Advertisement -

வர்த்தக ரீதியாகவும் இந்த ஓடிடி நல்ல வருவாயையும் கொடுக்கிறது. பெரிய படங்கள் என்றால் 100 கோடிக்கு மேலே சுலபமாக சம்பாதிக்கும். சிறிய படங்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கும் இந்த ஓடிடி தளங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

Most Popular