சினிமா

” தளபதி விஜயுடன் நீண்டகாலப் பகையை முடித்துக் கொள்ள நான் ரெடி! அவர் ரெடியா? – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் தளபதி விஜய். 90களில் இளைய தளபதியாக அறிமுகம் ஆகி தற்போது தளபதியாக தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக இருப்பவர். இவர் தற்போது வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய்க்கும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஒருவருக்கும் இடையேயான பல வருட மோதல் பற்றிய செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது.

அந்த செய்திகளின்படி 16 வருடங்களுக்கு முன்பு தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த நடிகருக்கும் விஜய்க்கும் இடையே சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய பகையாக மாறி இன்றுவரை தொடர்கிறது. விஜய் அந்தத் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அந்த மூத்த நடிகரை அவமானப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மைதான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அந்த மோதல் குறித்தும் விஜய் உடனான தனது மணக்கசை போன அனுபவங்களை பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் அந்த முன்னணி நடிகர்.

Advertisement

2007 ஆம் ஆண்டு இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் போக்கிரி. இந்தத் திரைப்படத்தில் விஜயுடன் நடிகை அசின், வடிவேலு, நாசர், நெப்போலியன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழில் மட்டுமல்லாது ஹிந்திலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது தளபதி விஜய்க்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியனுக்கும் இடையே உனக்கு சப்பு ஏற்பட்டது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தளபதி விஜய் நெப்போலியனை அவமானப்படுத்தியதால் அன்றிலிருந்து 16 வருடங்களாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. அந்த அளவுக்கு இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விஷயத்தைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து இருக்கிறார் நெப்போலியன்.

தனது மகனின் மருத்துவத்திற்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அவர் இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் விஜயுடன் ஏற்பட்ட மோதல் பற்றி மனம் திறந்திருக்கிறார். அந்தப் பேட்டியின் போது நிருபர் ” நீங்கள் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா?என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்துள்ள நெப்போலியன் ” போக்கிரி பட சூட்டிங் போது நடிகர் விஜய் என்னை அவமானப்படுத்தினார். அதிலிருந்து இன்று வரை நான் அவருடன் பேசுவதில்லை. ஆனால் அதையெல்லாம் மறந்து நான் அவருடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன். அவர் என்னுடன் பணியாற்ற தயாரா? என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Advertisement

மேலும் இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து பேசிய நெப்போலியன் “விஜய் என்னுடன் பேசுவது இருக்கட்டும், முதலில் அவர் தனது தாய்,தந்தையுடன் அவருக்கு இருக்கும் வேற்றுமைகளை மறந்து சமரசமாக இருக்கச் சொல்லுங்கள். விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையேயான மோதல் அமெரிக்கா வரை அடிபடுகிறது” என தெரிவித்திருக்கிறார். நெப்போலியன் போக்கிரி படத்தில் காவல்துறை உயரதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையான போலீஸ் ஆபீஸராக நடித்த நெப்போலியன் கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது சினிமா மற்றும் அனைத்து விஷயங்களையும் தனது மகனுக்காக தியாகம் செய்து குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top