Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமகளை இழந்துள்ளேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.. உருக்கமாக பேசிய இளையராஜா.. !

மகளை இழந்துள்ளேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.. உருக்கமாக பேசிய இளையராஜா.. !

இசைஞானி இளையராஜா இந்திய சினிமாவிலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர். ஐந்து தசாப்தங்களாக பாடல்கள் கொடுத்து வருகிறார். அவரின் பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் உண்டோ. இன்று பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் இன்று தன்னைச் சந்திக்க வந்த பத்திரிக்கையாளர்களிடம் சோகமாக பேசினார்.

- Advertisement -

ஜூன் 2ஆம் தேதி இன்று 81வது வயத்தை எட்டியுள்ளார் இளையராஜா.உண்மையில் அவர் பிறந்த தினம் ஜூன் 3 தான், ஆனால் அத்தேதியில் தலைவர் கலைஞர் கருணாநிதியும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதால், தமிழக மக்கள் அந்தத் தேதியில் கலைஞரை மட்டுமே கொண்டாட வேண்டும் என நினைத்து இளையராஜா ஒரு நாள் முன்பு தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்று இளையராஜாவின் பிறந்தநாளுக்கு களால்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்கள் இன்று ராஜாவின் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்தி பேட்டி எடுத்தனர். ஆனால் ராஜா பிறந்தநாள் கொண்டாடும் மனதில் இல்லை.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” நான் என் மகளை இழந்துள்ளேன். அதனால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் திட்டம் என்று எதுவும் இல்லை. ” என வருத்தமாக பேசியுள்ளார். அண்மையில் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கேன்சர் நோயால் காலமானார். சிறிய வயதில் அவரின் இந்த இழப்பு இளையராஜாவின் குடும்பத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது.

- Advertisement -

எனினும் ராஜாவின் பிறந்தநாளை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று அவரின் வாழ்கை வரலாறு படமாக்கபடும் படக்குழுவிடம் இருந்து ஒரு புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த ஆண்டு ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரீலீஸ் ஆகவுள்ளது இப்படம்.

அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படம் சிறப்பாக அமைய திரைக்கதையில் நடிகர் கமல்ஹாசனும் மேற்பார்வை செய்யவுள்ளார். படத்திற்கு எந்த வித புதிய இசையும் இல்லாமல் இளையராஜாவின் பிரபலமான பழைய பாடல்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

Most Popular