Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா"ஏகே.62 திரைப்படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஏப்ரல் 14 இல் வெளியீடு" - இயக்குனர் மகிழ்...

“ஏகே.62 திரைப்படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஏப்ரல் 14 இல் வெளியீடு” – இயக்குனர் மகிழ் திருமேனி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார் . இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இந்தத் திரைப்படத்தின் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருந்தன. சென்ற வருடமே இந்த திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஒப்பந்தமாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் . அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குனராக படத்தில் இணைந்தார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது .

- Advertisement -

இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் அஜித் குமாரின் தந்தை மரணம் அடைந்தார் . இதன் காரணமாக ஏகே 62 படத்தினை பற்றி அறிவிப்பு ஏப்ரல் மாதமே வெளியாகும் ஆன ரசிகர்களிடம் ஒரு சந்தேகம் இருந்து வந்தது இந்நிலையில் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களும் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் மே மாதம் தொடங்கும் என செய்திகள் வெளியிட்டிருந்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தினைப் பற்றிய அப்டேட் வராதா என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரிடம் இயக்குனராகப் பணியாற்றியவர் மகிழ் திருமேனி . முன்தினம் பார்த்தேனே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய இவர் தடையற தாக்க மிகாமண் தடம் காவியத்தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் இயக்கு போகும் ஏகே .62 ஐந்தாவது படமாகும். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஏகே 62 படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர் வெளியிட்டு இருக்கிறார் . இது தொடர்பாக புகைப்படம் ஒன்றை பதிந்திருக்கும் இவர் ஏகே 62 படத்தின் டைட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அந்தப் பதிவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மகிழ் திருமேனி . இது தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

அந்தப் புகைப்படத்தினை பார்க்கும்போது அது ஒரு அரியாசனம் ஒன்றும் காட்சியளிக்கிறது. இன்னொரு பக்கம் பார்க்கும் போது பலிபீடம் போன்றும் காட்சியளிக்கிறது இதனை வைத்து பார்க்கும் போது இந்தத் திரைப்படம் அண்டர்வேர்ல்ட் பற்றிய கதையாக இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர் . கடந்த பிப்ரவரி மாதம் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் பற்றிய வதந்தி சமூக வலைத்தளங்களில் வெளியானது அதன்படி இந்தத் திரைப்படத்தின் பெயர் டெவில் என தகவல்கள் தெரிவித்தன . இந்தத் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பிற்கான புகைப்படத்தை பார்க்கும் போது அந்தப் பெயர் உண்மையாக இருக்கலாம் எனவும் ரசிகர்களும் விமர்சிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Most Popular