சினிமா

தல’யின் மூன் வாக் பற்றி இயக்குனர் வினோத் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்!

தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் துணிவு. இதில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உட்பட  பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமானது இன்று வெளியாகி  அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த வகையில் இருப்பதாக பாசிட்டிவ் விரிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன்  படம் பயங்கர மாஸாக  தாறுமாறாக இருப்பதாக தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது  சாதாரண மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தில் தரமான  மெசேஜ் வைத்திருக்கிறார்  இயக்குனர் வினோத்.

Advertisement

துணிவு திரைப்படத்தின் டிரைலரை பார்த்து  பெரும்பாலான மக்கள் இது  மணி  வேஸ்ட் வெப் சீரிஸின்  காப்பி தான் என்று  கூறிவந்தனர். ஆனால் வங்கி கொள்ளை மட்டுமல்லாது  படத்தில் மிகப்பெரிய பெஸ்ட்  வைத்திருக்கிறார் இயக்குனர்.

மங்காத்தா படத்திற்குப் பிறகு  அஜித் இதே போன்ற ஒரு கெட்டப்பில் பார்க்க தான் தல ரசிகர்கள் மட்டும் அல்ல அது தமிழ்நாடே காத்திருந்தது  அதற்கு மிகப்பெரிய விருந்தே வைத்து விட்டார்  இயக்குனர் வினோத்.

Advertisement

படத்தின் வெளியீட்டிற்கு பின்பு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்  படத்தின் சில காட்சிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு காட்சியில் அஜித் மைக்கேல் ஜாக்சனின் மூணு வாக் ஸ்டெப் போடுவது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் . அந்தக் காட்சிக்கு தியேட்டரே  அதிர்ந்த அளவுக்கு ரசிகர்களின் கரகோஷம் இருந்தது .

இந்த காட்சியை பற்றி விவரித்த இயக்குனர் வினோத் இது படமாக்கப்படும் போது படத்தின் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா யாருமே அஜித்திடம்  இப்படி ஒரு ஸ்டெப் வேண்டும் என்று கேட்கவில்லை. அஜித் தானாகவே மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் ஸ்டெப் போட்டுக் கொண்டு வீ வில் ராக் யூ பாடலை விசில் அடிப்பது போல் பாடினார். இது முழுக்க முழுக்க தல அஜித் அவராகவே செய்தது. இந்தக் காட்சியின் போது நான் அவரிடம் ஒரு வில்லத்தனமான புன்னகை மட்டும் தான் கேட்டேன் என்று கூறினார் .

மேலும் தொடர்ந்து விவரித்த அவர் ஒவ்வொரு வசனங்களின் போதும் நான்கு அல்லது ஐந்து  விதங்களில் அஜித் வசனங்களை பேசி காட்டுவார் அதிலிருந்து சிறந்த ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என்று கூறினார். படத்தில்  பணியாற்றிய அனைவரது அயராத உழைப்பும்  நன்றாக தெரிகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top