Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமா"லோகேஷ் கனகராஜின் யுனிவர்சலாக வெளிவருகிறதா!தளபதி 67"!- போஸ்டரில் வைத்த க்ளு!

“லோகேஷ் கனகராஜின் யுனிவர்சலாக வெளிவருகிறதா!தளபதி 67”!- போஸ்டரில் வைத்த க்ளு!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஜனவரி பதினொன்றாம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இத்தனை படத்தை அடுத்து தளபதி 67 வேலைகளில் பிஸியாகிவிட்டார் விஜய் . இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது நாம் அறிந்ததே. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

- Advertisement -

இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜனவரியே இரண்டாம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் மன்சூர் அலிகான்,அர்ஜுன் ,டைரக்டர் மிஷ்கின்.பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மற்றும் டைரக்டர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர் . இந்நிலையில் பட குழு தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது மேலும் படத்தில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவுகளை மனோஜ் பரமஹம்சாவும் சண்டை காட்சிகளை அன்பறிவு மாஸ்டரும் படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜு மேற்கொள்கிறார்கள் படத்திற்கான திரைக்கதை மற்றும் இயக்கத்தை லோகேஷ் கனகராஜ் கையாளுகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகும் திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரத்தினகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதி இருக்கின்றனர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக திரைப்படத்தை லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்கின்றனர் .

- Advertisement -

தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் இந்த படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சலில் வருமா? என்று எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்தது மேலும் இந்தத் திரைப்படத்தில் இதற்கு முன் கைதி,விக்ரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர்கள் யாரும் இதுவரை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பட குழு அதற்குள் ரசிகர்கள் யூகிக்கும்படி ஒரு விஷயத்தை வைத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர் .

- Advertisement -

அதாவது தளபதி 67 படத்தின் போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது அதில் எல்சியூ என்ற குறியீடு இருப்பதாகத் தெரிகிறது . இதனால் தளபதி 67 படமானது லோகேஷ் கனகராஜ் சினிமடிக் யுனிவர்சலில் ஒரு புதிய தளத்தில் பயணிக்க இருப்பதாக சினிமா வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன .

Most Popular