வர இருக்கின்ற 2023 ஆம் ஆண்டின் தைப்பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பொங்கலை முன்னிட்டு தல அஜித் அவர்களின் துணிவு திரைப்படமும் தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் வெள்ளித்திரைக்கு வர இருக்கின்றன.தல மற்றும் தளபதியின் படங்கள் ஒரே நாளில் இறங்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இவர்களின் படங்களைப் பற்றி ஏதேனும் ஒரு செய்தி வந்தால் கூட அதை திரைப்படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடி சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தின் மிக முக்கியமான செய்தி ஒன்று படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து வெளிவந்துள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆற்றியுள்ளது . இதனால் ரசிகர்கள் தல எப்போதுமே தல தான் என்று அஜித் குமாரை கொண்டாடி வருகின்றனர் .
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வலிமை படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் வினோத்திற்கு கொடுத்திருந்தார் தல அஜித் . அந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றதால் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு வழங்கினார். அந்தப் படத்திற்கு துணிவு என்று பெயர் சூட்டப்பட்டது. படத்தின் பெயர் வெளியான நாளிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்தப் படத்தையும் பாலிவுட் தயாரிப்பாளர் தோனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன .
இந்த படத்தின் கதை குறித்து எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்த வேளையில் இந்தப் படமானது ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் பேங்க் ஹெய்ஸ்ட் படமாக உருவாகி இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் ஒரு முழு நீள ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையோடு தயாராகி இருக்கிறது . இந்தப் படத்தில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களை உறைய வைக்கும் சாகச காட்சிகளும் நிறைந்துள்ளதாக இந்தப் படத்தின் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார் .
இது பற்றி பேசுகையில் தல அஜித் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் எந்தவித டூப் இல்லாமல் அவரே நடித்துள்ளதாக தெரிவித்தார் . இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் சவால் நிறைந்தவையாக இருந்தன எனினும் தல அஜித் டூப் இல்லாமல் அவரே எல்லா சண்டைக் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார் . தல அஜித் சண்டைக் காட்சிகளிலும் பைக் ஸ்டண்ட் களிலும் டூப் இல்லாமல் அவரே ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல . இதற்கு முன் மங்காத்தா படத்தில் தல பைக் ஸ்டண்ட் செய்தது நாம் அறிந்ததே .
மேலும் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக படத்தின் நாயகி மஞ்சு வாரியார் அவர்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இந்தப் படமானது ஒரு முழு ஆக்க்ஷன் படம் என்பதால் ஹாலிவுட் படம் பாணியில் ஹீரோவினுக்கும் பைட்டிங் சீக்வல் அமைக்கப்பட்டுள்ளதாம் . மஞ்சு வாரியர் மற்றும் அஜித்குமார் இணைந்து அனல் பறக்கும் துப்பாக்கி சண்டை காட்சிகள் படத்தின் இடம் பெற்றுள்ளதாக சுப்ரீம் சுந்தர் தெரிவித்தார் .
இந்தப் படமானது ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி இருக்கிறது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது தல ரசிகர்கள் இப்படம் வெளியாகும் நாளிற்காக இப்பொழுதே கவுண்டவுன் ஸ்டார்ட் செய்து காத்திருக்கின்றனர் . இந்தப் படமானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கல் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .