Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 படத்தின் டைட்டில் இதுவா?போஸ்டரில் லோகேஷ் வைத்த க்ளூ? !

தளபதி 67 படத்தின் டைட்டில் இதுவா?போஸ்டரில் லோகேஷ் வைத்த க்ளூ? !

தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தளபதி விஜய் ரசிகர்கள் படத்தின் அப்டேட் பற்றிய அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தனர் இந்நிலையில் படக்குழுவினர் வரிசையாக படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியது. மேலும் தளபதி 67 படத்தின் நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்புகள் நேற்று தொடர்ந்து வெளியாகி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இன்று தளபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நாளை டைட்டில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது.

ரத்தம் தெறிக்க வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரை பிரபல போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்திருக்கிறார். இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே விஜய் ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் போஸ்டரில் ஏதேனும் க்ளூ இருக்கா? என போஸ்டரை ஆராய்ந்து வருகின்றனர். போஸ்டர் வடிவமைத்த கோபி பிரசன்னாவும் ரசிகர்களுக்காக சில குறிப்புகளை போஸ்டரில் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போஸ்டரில் ஆங்கில எழுத்து ஏ என்பதன் குறியீடு இருப்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் போஸ்டரில் குறியீடாக 7 என இருக்கிறது. இந்தப் படமானது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சலில் வெளிவர இருப்பதால் ஒருவேளை படத்தின் பெயர் பிரபல துப்பாக்கியின் பெயராகவும் இருக்கலாம் என கணிக்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இது சம்பந்தமான புகைப்படங்களும் இணையதளத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரில் தளபதி விஜயின் கரங்களை பார்க்கும் போது அவை ஒரு பேயின் கை போன்று தோற்றமளிக்கிறது. இதனால் இப்படத்தின் பெயர் கோஸ்ட் ஆகவும் இருக்கலாம் என ரசிகர்கள் கணிக்கின்றனர். இதற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கோஸ்ட் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் போஸ்டரில் இருக்கின்ற ரத்த துளிகளை வைத்து பார்க்கும் போது படத்தின் பெயர் கோட் ரெட் எனவும் இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் கணித்து கூறி வருகின்றனர். எது எப்படியோ நாளை மாலை 5 மணிக்கு தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட் காத்திருக்கிறது.

Most Popular