சினிமா

“லியோ பட ஷூட்டிங்கில் பிரச்சனையா? பாதியிலேயே சென்னை வந்த திரிஷா”?- திரிஷாவின் தாயார் விளக்கம்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை சார்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்திற்காக பட குழுவினர் காஷ்மீரில் தங்கி இருந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் தளபதி 67 படக்குழு தொடர்ந்து அப்டேட்டுகளாக கொடுத்து தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. படத்திற்கான டைட்டிலையும் அட்டகாசமான டீசருடன் வெளியிட்டு அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர் . இந்தத் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் மன்சூர் அலிகான் சாண்டி மாஸ்டர் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மற்றும் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.

Advertisement

இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். சண்டை பயிற்சிகளை அன்பறிவு மாஸ்டர் கவனித்துக் கொள்கிறார். படத்தின் எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜ் கையாளுகிறார். இத்திரைப்படத்திற்கான வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரத்தினகுமார் மற்றும் தீரஜ் வைத்திய ஆகியோர் எழுதியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் படப் பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை நெட் பிரிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் சூட்டிங் இல் இருந்து நடிகை திரிஷா சென்னை திரும்பி விட்டதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் இடையேயும் பரவி வருகிறது. எதற்காக திரிஷா சென்னை திரும்பினார் அவருக்கு இந்த கதையில் விருப்பம் இல்லையா என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் சினிமா ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் எழுந்துள்ளது.

Advertisement

ஒரு சிலரது தகவலின் படி திரிஷாவிற்கு காஷ்மீரின் கடுமையான குளிர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை திரும்பியதாக தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ரசிகர்களிடையேயும் சினிமா ஆர்வலர்கள் இடையேயும் பலவிதமான குழப்பங்கள் நீடித்து வந்தன. மேலும் சிலர் லோகேஷ் கனகராஜ் இன் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது அதன் காரணமாக திரிஷா திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கலாம் எனவும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை திரிஷாவின் தாயார் ஜெயா நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் திரிஷா இன்னும் படப்பிடிப்பதற்காக காஷ்மீரில் தான் இருக்கிறார். அவர் சென்னை வந்ததாக வெளியான செய்திகள் வதந்தி மட்டுமே. அதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சையானது தமிழ் சினிமாவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top