சினிமா

“அடிமேல் அடி…….”! விக்னெஷ் சிவன் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டதா? யார் இந்த சர்க்கிள்?!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய இவர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தல அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படத்தின் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து இவர் உலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது அந்த திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் நயன்தாராவை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. தற்போது நயந்தாரா ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் அஜித்குமாரின் படத்தில் நீக்கப்பட்டதிலிருந்து தன்னை தமிழ் சினிமாவில் நிரூபிக்க கடுமையாக போராடி வருகிறார். ஏதேனும் ஒரு வெற்றி படத்தை இயக்கி தன் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை தீர்ப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு சில சமூக விரோதிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அப்டேட் செய்திருக்கும் இவர் தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டை சமூக விரோதிகள் ஹேக் செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் . இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் அச்சமூட்டுவதாகவும் எரிச்சலூட்டும் ஒரு உணர்வை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிய ஸ்கிரீன்ஷாட்டையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

விக்கி அபிஷியல் என்று இருக்கும் அவரது ட்விட்டர் பக்கம் தற்போது சர்க்கிள் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது மேலும் அதன் ப்ரொபைல் பிச்சர் மாற்றப்பட்டிருக்கிறது. இதனையும் சுட்டிக்காட்டி இருக்கும் விக்னேஷ் சிவன் யார் இந்த சர்க்கிள் என அந்தப் பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் தனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக செலிபிரிட்டி மற்றும் திரைத்துறை பிரபலங்களை குறி வைத்து இதே போன்று ஒரு கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திரைத்துறை பிரபலங்கள் மட்டும் செலிபிரிட்டி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதன் மூலம் ஆதாயம் தேடும் கும்பலின் சதியாகவும் இது இருக்கலாம் என திரை உலகின் ஒரு சந்தேகிக்கின்றனர் . தற்போது தான் அஜித் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டு மிகவும் மன உளைச்சலில் இருந்தார் விக்னேஷ் சிவன். அதற்குள் அடுத்த அடியாக அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது . சமூக வலைதளங்களில் ஒருவருடைய கணக்குகளை ஹேக் செய்வது சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு செயலாகும் இதன் மூலம் ஒருவரிடம் இருந்து பணம் பறிப்பதற்கும் அவரை பிளாக்மெயில் செய்வதற்கும் சில சமூக விரோத கும்பல்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top