நடிகர் ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெய்லர் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருவதால் படக்குழு இந்த மாற்றத்தை செய்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதனால் ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ரஜினியின் போட்டியாளராக ஒரு காலத்தில் கருதப்பட்ட கமல் தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்திருக்கிறார். இதனால் ரஜினியும் தனது படத்தை ஓட வைப்பதற்காக புதிய யுத்தி ஒன்றை பயன்படுத்தினார். அது ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த நடிகர்களை தனது படத்தில் நடிக்க வைத்து அந்த மொழிகளில் கல்லா கட்டும் முயற்சி தான் அது.
இதில் முதல் கட்டமாக நடிகர் மோகன்லால்,சுனில், ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இதில் நடிகர் மோகன்லால் நடிக்கும் காட்சி ஹைதராபாத்தில் அண்மையில் படமாக்கப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவும் வெளியிட்டது. இந்த நிலையில் மோகன்லால் தனது படத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஷூட்டிங் செய்து வருகிறார். ஆனால் ஜெய்லரில் அவர் நடிக்க வேண்டிய முக்கியமான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை.
தற்போது மோகன்லால் அதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி தாம் இழந்த கேரளா மார்க்கெட்டை மீண்டும் மீட்பதற்காக மோகன்லால் அந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என உறுதியுடன் இருக்கிறார். இதன் காரணமாக மோகன்லால் இருக்கும் ராஜஸ்தானுக்கு ஜெய்லர் படக் குழுவை அனுப்பி அங்கே அவரை வைத்து எடுக்க வேண்டிய காட்சியை முடிக்க இயக்குனர் நெல்சனுக்கு ரஜினி அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பட குழு தற்போது தங்களை திட்டத்தை மாற்றிக் கொண்டு மோகன்லாலுக்காக ராஜஸ்தான் வரை செல்கிறார்கள். சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மற்ற நடிகர்கள் சென்னை வரும் காலம் போய் மற்ற நடிகருக்காக சூப்பர் ஸ்டார் வெளியூர் செல்லும் காலம் வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கவலையில் உள்ளனர்.