Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாலியோவிடம் தோல்வியை தழுவிய ஜெய்லர்.. வர்த்தகத்தில் ரஜினியை முந்திய விஜய்

லியோவிடம் தோல்வியை தழுவிய ஜெய்லர்.. வர்த்தகத்தில் ரஜினியை முந்திய விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூல் மற்றும் அதிக வணிகம் செய்யும் நடிகராக விஜய் முதல் இடத்தில் இருக்கிறார்.விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய விஜய் படங்கள் கூட மற்ற நடிகர்களின் மெகா ஹிட் படங்களின் வசூலை விட அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஜெய்லர், லியோ படத்தின் பிசினஸ் ஒப்பிட்டுப் பார்த்தாலும், நடிகர் விஜய் தான் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜெய்லர் படத்தின் பிசினஸ் தற்போது தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கேரளாவில் லியோ திரைப்படத்தையும் ஜெயிலர் திரைப்படத்தையும் கோகுலம் என்ற ஒரே நிறுவனம் தான் வாங்கியிருக்கிறது. இதில் லியோ திரைப்படத்துக்கு பதினாறு கோடி ரூபாய் கொடுத்துள்ள கோகுலம் நிறுவனம் ஜெயிலர் படத்திற்கு வெறும் ஒன்பது கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் லியோ படத்தின் பிசினஸ் வெளிநாட்டு உரிமம் 60 கோடி ரூபாய் வரை விற்பனையாகி இருக்கிறது. ஆனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு இது 25 முதல் 30 கோடி ரூபாய் வரை தான் ஆகியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதேபோன்று தமிழகத்திலும் ஜெயிலர் திரைப்படத்தை சொந்த செலவிலேயே வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது .சன் பிக்சர்ஸ் படத்தை எப்போதும் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம்தான் வெளியிடும்.

இப்படி ஒவ்வொரு ஏரியாவிலும் ஜெயிலர் படத்தை விட லியோ அதிக பிசினஸ் செய்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாகவும் ரஜினி பிசினஸை விஜய் தாண்டி விட்டார் என்ற செய்தி மீண்டும் உண்மையாக இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துறை நிபுணர்கள் ஜெய்லர் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஒன்பது கோடி ரூபாய் தான் விலை போகிறப்பதாகவும் ஆனால் விஜய்க்கு பதினாறு கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும் இதன்மூலம் விஜயின் பிசினஸ் எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

Most Popular