Tuesday, May 21, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஎப்பா என்னா நடிப்புடா சாமி.. அடுத்த பெரிய நடிகர் கவின் தான்.. ஸ்டார் படத்தின் திரை...

எப்பா என்னா நடிப்புடா சாமி.. அடுத்த பெரிய நடிகர் கவின் தான்.. ஸ்டார் படத்தின் திரை விமர்சனம்

சிறப்பான டிரெய்லர் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமான ஸ்டார் இன்று உலகெங்கும் வெளியாகிறது. நேற்று மாலை பிரீமியர் எனும் சிறப்புக் காட்சியில் பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இதன் விமர்சனங்கள் எதிர்பார்த்தது போலவே நன்றாக வந்துள்ளது.

- Advertisement -

கவினின் முந்தைய படங்களான லிஃப்ட், டாடா மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. கவினின் சிறப்பான எதார்த்த நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வரிசையில் ஸ்டார் படமும் இணைந்துள்ளது. பல மாதங்களாக படங்களின்றி தவித்த கோலிவுட்டுக்கு இது ஒரு நல்ல விருந்து.

இளன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது ஸ்டார் படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கவிருந்தார். பிறகு தயாரிப்பு நிறுவனம் மாற, ஹீரோவும் மாற்றப்பட்டு கவின் அந்த இடத்திற்கு வந்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஹீரோவாக முன்னேற வேண்டுமென்ற கனவை நோக்கி ஓடுபவனைப் பற்றி தான் கதைக்களம்.

- Advertisement -

படத்தின் முதல் பாதி மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆங்காங்கு சில காமெடிகள், நல்ல பாடல்கள், மிடில் கிளாஸ் குடும்பத்தின் பிரச்சினைகள் என விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதியில் யுவன் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக ஒரு பாடல் வைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் இதற்கு விசில் சத்தம் பறக்கும்.

- Advertisement -

பிறகு திடீரென இடைவெளியில் ஒரு அதிர்ச்சி. காதல் தோல்வி, சினிமா வாய்ப்பை இழந்தது என அங்கிருந்து கவின் வாழ்கையில் எப்படி முன்னேறி ஒரு நடிகனாக வந்தார் என்பது தான் மீதி கதை. இரண்டாவது பாதியில் காதல் காட்சிகள் ஒரு அளவுக்கு மேல் வெறுப்பை உண்டாக்கும். படத்தில் நீளமும் ஒரு சிக்கல் எனக் கூறலாம்.

ஆனால் இதனைச் சரி செய்யும் அளவில் க்லைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கவின் எந்த அளவுக்கு திறன் கொண்ட நடிகர் என்பதை ஒரு சிங்கிள் டேக் ஷாட்டில் காட்டியிருப்பார். முடிவடைந்ததும் மக்கள் கைதட்டி கொண்டாடினர். அனைவரை விட படத்திற்கு பெரிய பலம் யுவன் ஷங்கர் இசை தான். மெல்லிசையில் புகுந்து விளையாடியுள்ளார்.

2024ல் முதல் பெரிய வெற்றிப் படமாக ஸ்டார் அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Most Popular