Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த ஜவான்.. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா?...

இந்திய அளவில் புதிய சாதனை படைத்த ஜவான்.. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா? நீ ஜெய்ச்சிட்ட அட்லீ!

அட்லியின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே என்ற பாடல் தற்போது உண்மையாக இருக்கிறது.நடிகர் ஷாருக் கான் வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் தற்போது வசூல் மலையில் நனைந்து வருகிறது.

- Advertisement -

பாலிவுட் சினிமாவின் இதுவரை இல்லாத அளவிற்கு எடுக்கப்பட்ட மாஸ் மசாலா திரைப்படம் ஆகவும் சமுதாய கருத்துகளை கூறும் திரைப்படமாகவும் ஜவான் வெளி வந்திருக்கிறது.

இதனால் தமிழகத்தில் நேற்று முதல் நாள் மாலை காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சென்னையில் மழையையும் தாண்டி நேற்று இரவு ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இருந்தது.

- Advertisement -

இதேபோன்று படம் திரையிட்ட எல்லாம் திருவிழா போல் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு ஜவான் திரைப்படம் வசூல் சாதனையை படைத்திருக்கிறது.ஒரே நாளில் அட்லீ இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய இயக்குனர் என்ற பெயரை வாங்கி விட்டார்.

- Advertisement -

தற்போது ஜவான் திரைப்படம் முதல் நாள் மட்டும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஜவான் பெற்றிருக்கிறது.

மேலும் ஜவான் ஹிந்தியில் மட்டும் 75 கோடி ரூபாய் வசூல் ஈற்றி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தி மார்க்கெட்டில் அதிகபட்சமாக பதான் திரைப்படம் 55 கோடி ரூபாயை வசூல் செய்து இருந்த நிலையில் ஜவான் தற்போது அதனை முறியடித்து இருக்கிறது.

இதனால் ஹிந்தியில் மட்டும் ஜவான் திரைப்படம் 650 முதல் 700 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜவான் திரைப்படம் 1500 கோடி ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த அட்லி மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

Most Popular