Friday, October 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகெஞ்சி கூத்தாடி ஜெயம் ரவியை மீண்டும் படத்தில் சேர்த்த உடனே இன்னொரு சிக்கல்.. சிம்புவின் மேல்...

கெஞ்சி கூத்தாடி ஜெயம் ரவியை மீண்டும் படத்தில் சேர்த்த உடனே இன்னொரு சிக்கல்.. சிம்புவின் மேல் தடை.. மணிரத்னம் – கமல் படம் தொடர இதைச் செய்தே ஆக வேண்டும்.. !

மணிரத்னம் – கமல்ஹாசன் காம்போ சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைக் கோர்த்துள்ளது. பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் படம் பெரிய நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. ஆனால் நடிகர்கள் அறிவிப்புக்குப் அடுத்தடுத்து மூவர் வெளியேற பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி ஒவ்வொருவராக மீண்டும் சேர்க்கிறது மணிரத்னம் & கோ.

- Advertisement -

கமல்ஹாசன் அவர்களுடன் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் உட்பல சிலர் ஒப்பந்தம் ஆகினர்.
ஆனால் இதில் 3 பேர் வெவ்வேறு காரணங்களால் வெளியேறினர். துல்கர் சல்மான் சூர்யாவுடன் ஒப்பந்தமான படத்திற்கு செல்வதால் இதில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் சித்தார்த் தனிப்பட்ட காரணங்களால் விலகினர்.

ஜெயம் ரவி வெளியேறுவதற்கு முக்கியக் காரணம் மணிரத்னத்தின் மெத்தனப் போக்கு என சில செய்திகள் வந்துள்ளன. அதாவது ஜெயம் ரவி கொடுத்த தேதிகளை வீனாக்கியதால் அவர் அதிருப்தி அடைந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இத்தகு கெட்ட பெயர் மணிரத்னம் அவர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் துல்கர் சல்மான், ஜெயம் ரவியை சந்தித்து சமாதானம் செய்து மீண்டும் படத்தில் இணைந்துள்ளார்.

- Advertisement -

துல்கர் சல்மான் – சூர்யா செய்யவிருந்த புறநானூறு படம் தல்லிபோனதால், அந்தத் தேதிகளை தக் லைப் படத்திற்கு கொடுத்துள்ளார் துல்கர். இவர்கள் விலகியதை அடுத்து சிம்பு உள்ளே வந்துள்ளார். ஆனால் அதிலும் மற்றொரு சிக்கல் வந்துள்ளது. ஒருபக்கம் சிம்பு இப்படத்தில் நடிப்பதில் ஜெயம் ரவிக்கு விருப்பம் இல்லை.

- Advertisement -

அதனைத் தாண்டி சிம்பு படத்தில் நடிக்கவேக் கூடாது என தயாரிப்பாளர்கள் தடை விதிக்க வரிந்துக் கட்டிக் கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திய இழப்பை இன்னும் இன்னும் அவர் கொடுக்காததால் தடைக் கோரியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதனைத் தொடர்ந்து சிம்புவைச் சந்தித்து மணிரத்னம் பேசினார்.

தான் உடனடியாக இதனை சரி செய்வதாக மணிரத்னம் அவர்களிடம் உறுதியளித்துள்ளார் சிம்பு. அவருக்கு இப்படத்தில் இரு வேடங்கள் என்பதால் நிச்சயம் அனைத்துச் சிக்கல்களையும் சரி செய்துவிட்டு படக்குழுவுடன் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular