Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய் மீது அப்படி என்ன கோபம் .. டென்ஷன் ஆன ஜெயம் ரவி... என்ன நடந்தது...

விஜய் மீது அப்படி என்ன கோபம் .. டென்ஷன் ஆன ஜெயம் ரவி… என்ன நடந்தது பாருங்க

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகராக இடம்பெற்றிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த அகிலன் ,இறைவன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இதைத் தொடர்ந்து தற்பொழுது அவர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்று திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள் .இந்தத் திரைப்படத்தின் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஜெயம் ரவி இந்த சைரன் திரைப்படத்தை பெரும் அளவில் நம்பிக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு இறைவனின் துணையும் வேண்டும் என்று திருப்பதிக்கு சென்று தரிசனம் பெற்று வந்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

- Advertisement -

அப்படி திருப்பதிக்கு சென்று கோயிலை விட்டு வெளியில் வரும் பொழுது பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர் .அப்பொழுது அவரிடம் விஜய் அரசியலுக்கு வந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

- Advertisement -

அந்த கேள்விக்கு மிகவும் ஆத்திரமடைந்தார் நடிகர் ஜெயம் ரவி கோயிலில் நின்று கேட்கும் கேள்வியா இது. நான் நடித்த திரைப்படத்தைப் பற்றி கேட்டிருந்தால் நான் பதில் கூறியிருப்பேன் என்று கண்டித்தார்.

அதற்குப் பிறகும் அவரிடம் அதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள் கடைசி வரை அதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார் நடிகர் ஜெயம் ரவி .இதற்கு முன்பு பல பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் எனக்கு விஜய் அண்ணாவை மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

அவர் ஒரு விஜய் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் தனக்குப் பிடித்த ஒரு நடிகர் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்காமல் ஏன் அவரை கடுப்பாக்கியது என்பது தெரியவில்லை.

இதற்கு பிறகு விஜயை சினிமாவில் பார்க்க முடியாது என்ற ஆத்திரமாக கூட அது இருக்கலாம் .இது போன்ற ஆத்திரம் பல விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது இருப்பதும் உண்மைதான் ஆனால் நடிகர் ஜெயம் ரவி செய்த செயல் சரியில்லை என்றும் இதற்கு நிதானமாக பதில் கூறி இருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular