சினிமா

“நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மேடையில் கமல்ஹாசனும் பாரதிராஜாவும்” – தங்கர் பச்சான் கொடுத்த அசத்தலான் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தங்கள் பச்சான். ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குனராக அறிமுகம் ஆகி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். மலைச்சாரல் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர் மோகமுள் மற்றும் காதல் கோட்டை திரைப்படங்களில் இவரது ஒளிப்பதிவு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது . பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து சொல்ல மறந்த கதை தென்றல் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர்.

தனது மகன் விஜித் பச்சானை வைத்து டக்கு மக்கு டக்கு தாளம் என்ற திரைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டார் ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்து அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றினை இவர் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு கருமேகங்கள் கலைகின்றன என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

Advertisement

இத்திரைப்படத்தினை வாவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக டி.வீரசக்தி என்பவர் தயாரிக்கிறார். இது பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளர் மனித மனங்களில் இருக்கும் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான படைப்பு என தெரிவித்துள்ளார். இந்தக் கதையை கேட்ட போதே தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக ஒரு பாடலை எழுதும்போது கவிஞர் வைரமுத்து கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது. இந்த மாதம் ஜனவரி மாதத்தோடு படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்ததாக படத்தின் இயக்குனர் தங்கர்பச்சான் தனது முகப்புத்தகத்தின் மூலம் தெரிவித்து இருந்தார். மேலும் தனக்கு சினிமா அரங்குகளில் காட்சிகளை அமைப்பதில் உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர் மக்களோடு மக்களாக எனது கதாபாத்திரங்களை உலாவ விட்டு படம் எடுப்பதில் தான் விருப்பம் எனவும் தெரிவித்திருந்தார். அதற்காக இவ்வளவு கால நாட்கள் தேவைப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பிரமோஷன் ஆக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இயக்குனர் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இத்திரைப்படத்தின் கதை ஒரு குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top