Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஆரம்ப இடத்திற்கே வந்த கமல்.. சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய உலக நாயகன்

ஆரம்ப இடத்திற்கே வந்த கமல்.. சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய உலக நாயகன்

நடிகர் கமல்ஹாசன் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருந்தார். நடிகர் ரஜினியை விட கமலின் படம் தான் அதிகமாக ஓடிய காலமும் இருந்தது. கிட்டத்தட்ட 1996 ஆம் ஆண்டு வரை ரஜினி படங்களும் கமல் படங்களும் மாறி மாறி வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும்.

- Advertisement -

கிட்டத்தட்ட இந்தியன் வரை இந்த நிலைமைதான் நீடித்தது. ஆனால் அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சினிமா பாணியை மாற்றிக்கொண்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆக்சன் படங்களாக நடித்து வந்தார்.

நம்பர் 1 யார்?

இதன் காரணமாக நடிகர் ரஜினியின் சினிமா வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். அதன் பிறகு நடிகர் ரஜினியின் மார்க்கெட் சரிய தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் மற்ற நடிகர்கள் எல்லாம் நம்பர் ஒன் இடத்திற்கு வர தொடங்கினர்.

- Advertisement -

விக்ரம் வசூல்

இந்த நிலையில் நடிகர் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் விக்ரம் வசூல் சாதனை படைத்தது.

- Advertisement -

அடுத்தடுத்து பெரிய படங்கள்

இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த வருகிறார் .இது பெரிய அளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பான் இந்திய திரைப்படமாக பிரபாஸுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடிப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Silambarasan TR and Kamal Haasan

இதேபோன்று நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் இணைந்து கமலஹாசன் ஒரு படத்தில் பணியாற்றுகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இதேபோன்று இயக்குனர் எச் வினோத்துடன் ஒரு படமும் அதன் பிறகு பா ரஞ்சித்துடன் ஒரு படமும் நடிக்கும் கமல்ஹாசன் இறுதியில் விக்ரம் 2 திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் பேன் இந்தியா ஸ்டாராக மீண்டும் களம் இறங்கினார்.

கமல் நம்பர் 1

மேலும் வசூல் சாதனையில் நம்பர் ஒன் இடத்தை நடிகர் கமலஹாசன் பிடிக்கிறார். தமது சினிமா வாழ்க்கை நம்பர் 1 இடத்தில் இருந்து தொடங்கிய கமலஹாசன் தற்போது நம்பர் ஒன் இடத்தில் சினிமா வாழ்க்கையில் முடிக்க இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Most Popular