Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇளையராஜா வாழ்கை வரலாறு திரைக்கதையில் குறை கூறியுள்ள கமல்ஹாசன்.. கடைசி நேரத்தில் அவர் செய்துள்ள உதவி.....

இளையராஜா வாழ்கை வரலாறு திரைக்கதையில் குறை கூறியுள்ள கமல்ஹாசன்.. கடைசி நேரத்தில் அவர் செய்துள்ள உதவி.. !

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா அவர்கள். ஏன் உலகம் முழுக்க அவரது பெருமை பரவியுள்ளது. 2K சிறுவர்கள் கூட நடப்பில் வரும் பாட்டுக்களை விட இளையராஜாவின் பழைய பாடல்களைத் தான் அதிகம் விரும்பி வருகிறார்கள்.

- Advertisement -

இளையராஜாவின் இசைக்கு நிகர் அவரே. அத்தகு பெருமைக்குரிய இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது குறித்து 2 ஆண்டுகளாக செய்திகள் பரவி வந்தன. இரு தினங்களுக்கு முன்னர் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பேன் இந்தியா படமாக இது அமைந்துள்ளது.

இளையராஜா எனவே படத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களின் ஒருவரான நடிகர் தனுஷ் தான் அவர் கதாபாத்திரத்தை செய்கிறார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் பயணித்த அருண் மாத்தீஸ்வரன் இந்த வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார்.

- Advertisement -

இது தான் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. இதுவரை அருண் இயக்கிய 3 படங்களும் தரமான ஆக்க்ஷன் படமே. அவருக்கு இதெல்லாம் செட் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அவருக்கு உதவியாக தான் உலகநாயகன் கமல்ஹாசன் முன் வந்துள்ளார்.

- Advertisement -

படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் படக்குழுவுடன் கமல்ஹாசன், வெற்றிமாறன் போன்ற பல பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர் கமல்ஹாசன். படத்தின் கதையமைப்பை கமல்ஹாசனுடன் கான்பிக்குமாரு அருணிடன் இளையராஜா கூறியுள்ளார்.

அதனைப் பார்த்த கமல் பல்வேறு திருத்தங்கள் சொல்லியுள்ளார். அதன் பிறகு, இளையராஜாவிடம் இந்தப் படத்துக்கு தானே திரைக்கதை எழுதுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். கமல் ஒரு பக்கம் மணிரத்னத்தின் படம், தயாரிப்பு பணிகள், லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் பாடல் என தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இத்தகு சூழலில் அவர் திரைக்கதை எழுத முன்வருவதற்கு காரணம், இளையராஜாவின் மீது உள்ள மரியாதைக்கும் அன்புக்கும் பணிந்து தான். கமல் எழுதுகிறார் என்றால் நிச்சயம் படம் சிறப்பாகத் தான் அமையும். அவரின் திறனை உலகமே அறியும். இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ், கமல் திரைக்கதை என இப்போதே படத்துக்கு கியாரண்டி கிடைத்துள்ளது.

Most Popular