Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகமலின் புது திரைப்படங்கள் பட்டியல்.. இவர்தான் டைரக்டரா.. ?லிஸ்டிலேயே இல்லையே..!

கமலின் புது திரைப்படங்கள் பட்டியல்.. இவர்தான் டைரக்டரா.. ?லிஸ்டிலேயே இல்லையே..!

இதுவரை 230 திரைப்படங்களை நடித்து சாதித்தவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்பொழுது தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

- Advertisement -

ரொமான்ஸ் ,டூயட் ,லவ் இது போன்றவற்றை செய்வதற்கு வயது வரம்பு இருக்கிறது என்பதை உணர்ந்த உலகநாயகன் தன் வயதிற்கு ஏற்றது போன்ற திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடித்த விக்ரம் திரைப்படம் அவருடைய அந்த முடிவிற்கு நல்ல பலன் அளித்தது. அதை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் டு  திரைப்படத்தையும் நடித்திருக்கிறார் கமலஹாசன்.

- Advertisement -

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233 வது திரைப்படத்தை நடிக்க இருக்கிறார் அதேபோல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைவ் என்ற திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் இணைந்திருக்கிறார் என்றும் இது இவருடைய 234 ஆவது திரைப்படம் என்ற தகவலும் அண்மையில் வெளிவந்தது.

மேலும்  நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி2898AD என்ற திரைப்படத்தில் உலக நாயகன் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது பேன் இந்தியன் மொழியில் வெளியிடப்பட இருக்கும் பிக் பட்ஜெட் திரைப்படம் ஆகும்.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் புதியதாக ஒரு பதிவும் வெளியிடப்பட்டு இருக்கிறது கபாலி, கே ஜி எஃப் லியோ போன்ற திரைப்படங்களில் சண்டை காட்சிகளை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ். மேலும் இவர்கள் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் சண்டை காட்சிகளை இயக்கி இருக்கிறார்கள்.

அன்புமணி மற்றும் அறிவு மணி என்ற சகோதரர்கள் ரசிகர்களால் அன்பறிவு என்று அறியப்பட்டார்கள் இவர்கள் தற்பொழுது உலகநாயகன் நடிக்கும் இருக்கும் தக் லைவ் ,இந்தியன் டு ,கல்கி போன்ற திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளை இயக்க இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவர்கள் தமிழில் ஒரு திரைப்படத்தை டப் செய்ய போவதாகவும் அந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பதாகவும் அது அவருடைய 237 வது திரைப்படம் என்று பதிவிடப்பட்டு இருக்கிறது. இது இவர்கள் இயக்கும் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தை இந்தியன் திரைப்படத்தின் உடைய மூன்றாவது பாகம் நடித்த பிறகுதான் உலகநாயகன் இந்த திரைப்படத்தை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Most Popular