Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா"அஜித் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கும் உலக நாயகன்" - விரைவில் வெளிவர இருக்கும் அதிகாரப்பூர்வ...

“அஜித் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கும் உலக நாயகன்” – விரைவில் வெளிவர இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். கடந்த வருடம் இவரது நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதனைத் தொடர்ந்து உற்சாகமான கமல் தற்போது போட தயாரிப்புகளிலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் . இவரது நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது .

- Advertisement -

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் சித்தார்த் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது . அந்தத் திரைப்படம் கமல்ஹாசனின் 233 வது திரைப்படம் ஆக உருவாக்க உள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் இந்த புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளும் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும் இந்த திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது . அந்தத் தகவல்களின்படி சதுரங்க பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த எச் வினோத் இயக்கத்தில் தான் நடிகை இருக்கிறார் கமல்ஹாசன் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது . மேலும் இவர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை வலிமை மற்றும் துணிவு என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

சமீபத்தில் கமல்ஹாசன் பாரம்பரிய நெல் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களை சந்தித்தார் அப்போது அவருடன் எச் வினோத்தும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப் போவது எச் வினோத் என்பது உறுதியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதுவரை நுட்பமான கதைகளை திரைப்படம் ஆக எடுத்து வெற்றி கண்ட வினோத் தற்போது அரசியல் கதைக்களத்தை கையில் எடுக்க இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

அந்தத் தகவல்களின்படி எச். வினோத் மற்றும் கமல்ஹாசன் இனிய இருக்கும் திரைப்படம் ஒரு அரசியல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது . இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு தான் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன . கமல்ஹாசன் மற்றும் வினோத் இனிய இருக்கும் திரைப்படத்திற்கான அறிவிப்பை வெகு விரைவிலேயே ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன

Most Popular