Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஉலகளவில் எகிறப்போகும் சூர்யாவின் மார்க்கெட்.. பலே திட்டம்! கங்குவா ரிலீஸ் எப்போது?

உலகளவில் எகிறப்போகும் சூர்யாவின் மார்க்கெட்.. பலே திட்டம்! கங்குவா ரிலீஸ் எப்போது?

நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படம் ஆன கங்குவா திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கம் கங்குவா திரைப்படத்தின் டீசரை பார்ப்பதற்கு பாகுபலி போன்ற பிரம்மாண்டத்தை ரசிகர்கள் உணர்ந்ததாக கூறியிருக்கிறார்கள். .

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் அப்ரார் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த பாபி டீயோல் கங்குவா திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் அனிமல் திரைப்படத்தில் கதாநாயகனான ரன்பீர் சிங்கை விட அப்ரார் கதாபாத்திரத்தில் வந்த பாபி டியோளுக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திரைப்படத்தின் தயாரிப்பு  நிறுவனமான ஸ்டுடியோ கிரேனிடம் இத்திரைப்படம் எப்பொழுது வெளியிடப்படும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது எந்த பெரிய நடிகர்களின் திரைப்படமும் வெளியிடப்படாததால் தமிழ் சினிமாவை உருகுளைந்து போய் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளிவந்தால் அது அந்த நடிகருக்கு நல்ல வாய்ப்பைத் தரும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் நல்ல வரவேற்பு பெரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இன்டர்நேஷனல் லெவலில் ரீச் இருக்கும் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார் .இதனால் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பெரிய திரைப்படங்களுடன் சேர்த்து வெளியிடாமல் சோலோவாக இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular