சினிமா

ஜிகர்தண்டாவின் 2வது பாகம்.. கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோ

தமிழ் சினிமாவில் பாடல் சண்டைக் காட்சி என கமர்சியல் படமாக வந்து கொண்டிருந்த நிலையில் பீட்சா திரைப்படம் மூலம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.புது ட்ரெண்டையே உருவாக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு பேய் கதையை வித்தியாசமாக கூறி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், அடுத்தது 2014 ஆம் ஆண்டு சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கினார்.

இது தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு பெற்று தந்தது.அதிக நாட்கள் ஓடிய வசூல் சாதனை படைத்த ஜிகர்தண்டா திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. பாபி சிம்ஹா வாழ்க்கையில் இந்த படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரவுடி கதையில் காமெடியை வைத்து அனைவரையும் ரசிக்கும்படி செய்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா திரைப்படம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் பச்சன் பாண்டே என்று அக்ஷய்குமார் ரீமேக் செய்தார்.

இரக்கமற்ற ஒரு ரவுடி குறித்து சினிமா படத்தை இயக்க நினைத்த ஒரு இளம் இயக்குனர் , ரவுடி குறித்து படம் எடுத்தாரா அதில் என்ன நடந்தது என்பதை விளக்கும் திரைப்படம் தான் ஜிகர்தண்டா.இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவேறி இருக்கிறது. இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜிகர்தண்டா குளிர்பானத்தை தயாரிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. வீடியோ முடிவில் ஜிகர்தண்டாவை நீங்கள் சுவைத்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது அடுத்த பாகத்துக்கு தயாராகுங்கள் என்று பொருள்படும்படி இரண்டாவது ஜிகர்தண்டாவை காட்சியில் காட்டுகிறார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாகத்தின் எழுத்துப்பணி தற்போது தொடங்கி விட்டதாக அந்த வீடியோவில் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியா இல்லை இது வேறொரு கதைகளத்தை கொண்டு தயாரிக்கப்படும் படமா என்ற தகவல் வெளியாகவில்லை.முதல் பாகத்தின் கதையில் சித்தார்த்தை கொல்ல வரும் பாபி சிம்ஹா அவரை மன்னித்து விட்டுவிடுவார். இதனால் இரண்டாவது பாகத்தில் கதை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top