Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஎன்ன இருந்தாலும் கிச்சா சுதீப் வெங்கட் பிரபுவை இப்படி கூறி இருக்கக் கூடாது ரசிகர்கள் ஆவேசம்

என்ன இருந்தாலும் கிச்சா சுதீப் வெங்கட் பிரபுவை இப்படி கூறி இருக்கக் கூடாது ரசிகர்கள் ஆவேசம்

தமிழ் சினிமாவில் நானி திரைப்படத்தின் வில்லனாக அறிமுகமானவர் கிச்சா சுதீப். இவர் ஒரு கன்னட நடிகராவார். கன்னடத்தில் இவர் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கக்கூடிய ஒரு பிரபலமாவார்.

- Advertisement -

இவர் இயக்கிய திரைப்படங்களும் நிறைய விருதுகளை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களை நடித்து இருக்கிறார் கிச்சா சுதீப்.

இவர் 2003 ஆம் ஆண்டு நடித்த கிச்சா திரைப்படத்தின் வரவேற்பு கொண்டு தான் இவருக்கு கிச்சா சுதீப் என்ற பெயரும் கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவை பற்றி பதிவிட்ட ஒரு பதிவு தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாக இருக்கிறது.

- Advertisement -

தளபதி விஜய் வைத்து கோட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து கிச்சா சுதீப் வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க இருப்பதான தகவல் அண்மையில் வெளிவந்துள்ளது.

- Advertisement -

ஆனால் எதிர்பாராத விதமாக கோட் திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபுவின் சொந்த வாழ்வில் சோகம் நிகழ்ந்துவிட்டது . தனது சகோதரி பவதாரணி மரணம் எதிர்பாராமல் அமைந்த நிலையில் கோட்  திரைப்பட படப்பிடிப்பை சற்று நிறுத்தி வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

அதிலிருந்து வெளிவந்து மீண்டும் தன்னுடைய கோட் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் தன்னுடைய அடுத்தடுத்து திரைப்படங்களாக இருக்கும் கிச்சா சுதீப் உடைய திரைப்படமும் சிவகார்த்திகேயனுடைய திரைப்படத்தையும் ஒத்திவைத்துவிட்டு  கோட் திரைப்பட படப்பிடிப்பில் மட்டும் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.

இது ஒரு புறம் இருக்க கிச்சா சுதிப்பிடம் வெங்கட் பிரபு உடைய கைவண்ணத்தில் உங்களை எப்பொழுது திரையில் பார்ப்பது என்று கேட்டதற்கு அவர் வெங்கட் பிரபுவின் மனநிலையை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் “வெங்கட் பிரபுவை காணவில்லை” என்று அலட்சியமாக பதில் கூறி பதிவிட்டிருக்கிறார் சுதீப்.

இவருடைய இந்த பதிவு இவர் மீது இருந்த மரியாதை கெடுத்து விட்டது. ஒரு இழப்பில் இருக்கும் இயக்குனரை எப்படி இவ்வாறு அவர் பதிவிடலாம் என்று ரசிகர்கள் இவர் மீது ஆக்ரோஷம் அடைந்திருக்கிறார்கள்.

Most Popular