சினிமா

“கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் பற்றி மனம் திறந்த அவரது பெற்றோர்? – பத்திரிகையாளர்களிடம் சொன்ன தகவல்!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகிய இவர் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியனார். அதனைத் தொடர்ந்து சிவா கார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர். இந்தத் திரைப்படங்களை தொடர்ந்து தனுசுடன் தொடரி தளபதி விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் சிவா கார்த்திகேயனுடன் ரெமோ ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருப்பவர்.

கீர்த்தி சுரேஷும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த மகாநதி என்ற திரைப்படம் தெலுங்கில் வெளியானது. இத்திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்று பெயரில் வெளியானது. தமிழ் சினிமாவின் படம் பெரும் நடிகை சாவித்திரிய அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் இயல்பாகவும் ஏற்று நடித்திருப்பார் கீர்த்தி சுரேஷ். இந்தத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Advertisement

தற்போது நாணியுடன் இணைந்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா என்ற திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. ஆறு இந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் இந்தத் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

சமீப காலமாகவே இவரது பெயர் கிசுகிசுக்களில் அடிபட்டு வருகிறது. இவர் ஒரு ஹோட்டல் தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் கிசுகிசுக்கள் பரவி வந்தன. அந்த வதந்தி முடிந்த நிலையில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதன் காரணமாக தளபதி விஜய் இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் சினிமா வட்டாரத்தில் செய்திகள் வலம் வந்தன.

Advertisement

இந்த கிசுகிசுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கின்றனர். அவரது காதல் விவகாரம் பற்றி பேசிய அவர்கள் கீர்த்தி சுரேஷ் இருக்கு யார் மீதாவது காதல் இருந்தால் அதனை கண்டிப்பாக அவர் எங்களிடம் கூறி விடுவார். நாங்களும் உங்களுக்கு அந்த செய்தியை அறிவிக்கிறோம் என தெரிவித்தனர் . இதுவரை அவர் யாரையும் காதலிப்பதாக எங்களிடம் கூறவில்லை. இதனால் அவரது காதல் விவகாரம் தொடர்பான கிசுகிசுகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கோடம்பாக்கத்தில் நிலவி வந்த கீர்த்தி சுரேஷின் காதல் கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top