Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரஜினி வீட்டில் திருடியவருக்கு போலீஸ் தந்த தண்டனை! வழக்கறிஞர் சொன்ன ரகசியம்

ரஜினி வீட்டில் திருடியவருக்கு போலீஸ் தந்த தண்டனை! வழக்கறிஞர் சொன்ன ரகசியம்

வழக்கறிஞரும் சில சினிமா திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகருமான கண்ணதாசன் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் கண்ணதாசன் திருடர்கள் குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

திருடர்கள் எப்படி திருடுவார்கள், அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள் ,எதற்காக திருடுகிறார்கள் என்பது குறித்து எல்லாம் பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.

அதில் ஒரு விஷயம் தான் நடிகர் ரஜினி வீட்டில் 20 ஆண்டுக்கு முன்பு முருகேசன் என்ற திருடன் தனது நண்பர்களுடன் திருடிய கதையை கூறியிருக்கிறார். அதில் முருகேசன் தன் நண்பர்களுடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு சென்று அங்கு திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது ரஜினி அவருடைய மகள்கள் எல்லாம் வெவ்வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த வைர நகைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை இந்த திருடர்கள் திருடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது மூன்று பேரும் யார் எந்த பொருள்களை பங்கிட்டு கொள்வது என்று பேச்சுவார்த்தை நடந்த போது சண்டை நிகழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த ரோந்து வந்த போலீசார் ஏன் சண்டை போடுகிறீர்கள் எனக் கேட்டபோது அவர்கள் திருடியது தெரிய வந்தது.

இதனை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நகைகளை மீட்டு ரஜினியிடம் ஒப்படைத்தனர். ஆனால் ரஜினி இது குறித்து எந்த புகார் அளிக்கவில்லை. ஆனால் இந்த மூன்று பேரையும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு முருகேசன் என்ற திருடரை மட்டும் அழைத்து  நகைகள் எங்கு திருடி வைத்திருக்கிறாய் என்று கேட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது அவரை என்கவுண்டரில் போலீசார் கொன்றனர். சில வழக்குகளை பதிவு செய்யாமல் இப்படி போலீசாரே தண்டனை கொடுப்பதெல்லாம் அதிகம் நடக்கும்.சில திருடன் திருந்தி வாழ்ந்தாலும் வேறு வழக்கிற்காக அவர்களை கைது செய்து மீண்டும் பழையபடி திருட்டு தொழிலே அவர்கள் திரும்ப போலீசார் காரணமாக இருப்பார்கள் என்று வழக்கறிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.

Most Popular