Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய் ரசிகர்களிடம் லியோ குழுவை கோர்த்துவிட்ட சவுக்கு சங்கர்.. லியோ தயாரிப்பு குழு அதிரடி

விஜய் ரசிகர்களிடம் லியோ குழுவை கோர்த்துவிட்ட சவுக்கு சங்கர்.. லியோ தயாரிப்பு குழு அதிரடி

தமிழ் சினிமாவில் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ தான். இது லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.இந்த நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் தொடர்பான இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

படத்திற்கு இன்னும் குறைவான நாட்களே  உள்ளதால் லியோ படத்திற்கான ப்ரமோஷனை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும் என பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோசனை இசை வெளியீட்டு விழாவில் இருந்து நடத்தலாம் என முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியை எங்கு நடத்தலாம் என லியோ பட குழு யோசித்து வரும் நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் எப்போதும் போல் நடத்தி விடலாம் என முடிவெடுத்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் விஜய் திரைப்படத்திற்கு ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் மறைமுக பிரச்சனையை அரசு மூலம் வழங்குவதாகவும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு இருந்தார்.

- Advertisement -

மேலும் லியோ திரைப்படத்தின் உரிமைகளை ரெட் ஜெயின்ஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டுமென்றும் மறைமுக அழுத்தம் உதயநிதி ஸ்டாலினிடமிருந்து தரப்படுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

உடனே இது முற்றிலும் தவறான செய்தி என்றும் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும் பட குழு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் லியோ இசை வெளியீட்டு விழா தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிகிறது.வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று தெரிகிறது.

Most Popular