நடிகர் விஜயின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக கருதப்படுவது லியோ. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 500 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி,தெலுங்கு ,கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் லியோ சூட்டிங் தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சஞ்சய் தத் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தது. மார்ச் 29ஆம் தேதி லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெறுகிறது. இதனை அடுத்து ஐதராபாத்தில் 20 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளது.
லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏர்போர்ட் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட பத்து நாட்கள் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் நடைபெற உள்ளது. இதனால் லியோ படத்தின் கிளைமாக்ஸ் ஏர்போர்ட்டில் நடப்பது போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விமான நிலையத்தில் இறுதிக்காட்சி எடுக்கப்படுவதால் அது ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல ஹாலிவுட் நிபுணர்களை லோகேஷ் கனகராஜ் வர வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு மே மாதம் ஒட்டுமொத்தமாக சூட்டிங் முடிந்து விடும். ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் சரியாக நடந்து வருகிறது. இதனால் அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவது எந்த சிக்கலும் இருக்காது. தற்போது ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய செட் இன்னும் மூன்று நாட்களில் முடிவடைந்துவிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.