Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"ரிலீசுக்கு முன்பே ஜெயிலரை முந்திய லியோ" - கரகாட்டக்காரன் ராமராஜனின் பரபரப்பு பேட்டி.!

“ரிலீசுக்கு முன்பே ஜெயிலரை முந்திய லியோ” – கரகாட்டக்காரன் ராமராஜனின் பரபரப்பு பேட்டி.!

90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கியவர் ராமராஜன். 80-களில் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராமராஜன் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார்.

- Advertisement -

80-கள் மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் மெகா ஸ்டார்களாக இருந்த ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுக்கே தன்னுடைய திரைப்படங்களின் மூலம் பயத்தை காட்டியவர் ராமராஜன். சில காலம் அரசியலில் பயணித்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு மேடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை .

இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக ரி என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன் . மகேஷ் என்பவர் இயக்கத்தில் தற்போது சாமானியன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் போன்றோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவிலேயே திரைப்படம் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டி அளித்த ராமராஜன் ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையேயான போட்டி குறித்தும் பேசியிருக்கிறார். இதுவரை 50 படங்களுக்கும் மேல் கதாநாயகனாகவே நடித்திருந்த இவர் மீண்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் . இந்த பேட்டியில் பேசியிருக்கும் ராமராஜன் ” நான் நடித்திருக்கும் சாமானியன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது . இந்தத் திரைப்படத்தில் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் அனைத்து டெக்னீசியன்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணன் இளையராஜா எனது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . என்னுடைய வெற்றிகளுக்கு முக்கிய காரணமே அண்ணன் இசைஞானி இளையராஜா தான்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது மக்கள் தீர்ப்பை கொடுத்தே அமைகிறது . என்னுடைய சாமானியன் திரைப்படமும் மக்களின் தீர்ப்புக்காகவே காத்திருக்கிறது . மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன். விஜய் மில்டன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் என்னிடம் திரைப்படத்தில் நடிப்பதற்காக கதை சொன்னார்கள். என்னை இன்னும் நிறைய இயக்குனர்கள் அணுகி கொண்டு தான் இருக்கிறார்கள் .நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிகை இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் ரஜினி மற்றும் விஜய் குறித்து பேசிய அவர் ” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் நடிப்பது பாராட்டுக்குரியது. நான் இன்னும் ஜெய்லர் படம் பார்க்கவில்லை ஆனால் அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது என கேள்விப்பட்டேன். எனினும் விஜய் ரஜினியை தாண்டி பல உயரங்களுக்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும் . லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது செய்திருக்கும் வியாபார சாதனைகளே அதற்கு சாட்சி . எல்லாவற்றையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது மக்கள் வழங்கும் தீர்ப்புதான் . என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் நன்றாக இருக்க வேண்டும் எல்லோருடைய படங்களும் நன்றாக ஓட வேண்டும் தயாரிப்பாளர்களுக்கு நிறைய லாபம் வர வேண்டும்” என்று கூறினார்.

Most Popular