இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் 171 படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அடுத்தடுத்து சுமாரான படங்களைக் கொடுத்து வரும் தலைவர் ரஜினியின் லைன் அப்பில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பல்வேறு சூடான அப்டேட்கள் கடந்த 2 நாட்களாக பேசப்படுகிறது. அதில் மிக முக்கியமானது, படத்தின் ஷூட்டிங் முன்னர் சன் நிறுவனத்துக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் இடையே சில முடிவு வேறுபாடுகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சன் நிறுவனத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் லோகேஷிடம் தலைவர் 171 படத்தின் ஒளிப்பதிவாளரை மாற்றுவது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அதற்க்கு லோகேஷ் சற்றும் தயங்காமல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவை இப்படத்தில் பணியாற்ற துளியும் விருப்பமில்லை என வெளிப்படையாக கூறியுள்ளனர். காரணம், இதே சன் நிறுவனம் தயாரித்த பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராக செயல்பட்ட மனோஜ் இறுதியில் வெளிப்புற யூனிட் என்ற கணக்கில் 13 கோடிகள் வாங்கியுள்ளார். அந்த யூனிட்டும் மனோஜ் அவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சற்று அதிருப்தியில் தள்ளியுள்ளது.
ஆனால் லோகேஷ் கனகராஜோ ஒளிப்பதிவாளர் மனோஜ் தான் இப்படத்துக்கு மிகச் சரியாக இருப்பார் என அவரை விட்டுக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்துக்கு அமெரிக்காவில் இருந்து ஐ.மேக்ஸ் கேமரா இறக்குமதி செய்து வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கெல்லாம் பெரிய அளவில் மேலும் செலவாகும் என்பதால் சன் நிறுவனம் மறுப்புத் தேர்வுத் அவரை மீடுன் பரிசீலனை செய்து பார்க்குமாறு கேட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் முடிவை இன்னும் படக்குழு எடுக்கவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு ஈ.வி.பியில் லோகேஷ் அவரது ஸ்டைலில் ஷூட்டிங் முன் வெளியிடும் ப்ரோமோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த மாதம் 22ஆம் தேதி போல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.