Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசொன்ன நேரத்தில் படத்தை முடிக்கும் லோகேஸ்.. மாநகரம் முதல் லியோ வரை எடுத்து கொண்ட நாட்கள்

சொன்ன நேரத்தில் படத்தை முடிக்கும் லோகேஸ்.. மாநகரம் முதல் லியோ வரை எடுத்து கொண்ட நாட்கள்

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் என குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு படத்தையே எடுத்து முடித்து விடுவார்கள். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பணம் மிச்சம் செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் காலம் மாற மாற இயக்குனர்கள் படத்தை எடுக்கின்றேன் என்ற பெயரில் பெரும் நாட்களை செலவழிக்கின்றனர். சிலர் இந்த தேதியில் படத்தை எடுத்து முடிப்பதாக கூறிவிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் வரை இழுத்து அடித்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய படங்களை கூட சொல்லும் நாட்களில் எடுத்து முடித்து தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நன்மதிப்பைப் பெற்ற இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் தனது முதல் படமான மாநகரத்தை எடுக்க வெறும் 45 நாட்கள் மட்டும் தான் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

இதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற கைதி திரைப்படத்தை 62 நாட்களில் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை 129 நாட்களில் எடுத்து முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை 110 நாட்களில் முடித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது லியோ திரைப்படத்தை 125 நாட்களில் லோகேஷ் கனகராஜ் முடித்திருக்கிறார். இதன் மூலம் மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஆறு மாதத்திற்குள் எல்லாம் படத்தை முடித்து ரிலீஸ் செய்து விடுகிறார்.

இது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொருட்செலவை மிச்சம் செய்கிறது.இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜன் சிறந்த திட்டமிடுதல் தான் என்று திரைத்துறை வட்டாரங்கள் பாராட்டுகின்றனர்.

அட்லி போன்ற இயக்குனர்கள் சொல்லும் நேரத்தையும் பட்ஜெட்டையும் தாண்டி தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கும் இந்த தருணத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்பதாக பலரும் பாராட்டி உள்ளனர்.

Most Popular