தளபதி விஜய் நடிக்க உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜயை லோகேஷ் கனகராஜ் எப்படி காட்டப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் லியோ திரைப்படத்தை தமது ஸ்டைலில் இயக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் லியோ திரைப்படம் ஒரு சோதனை முயற்சியாக எடுத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இந்தப் படத்திற்கு விஜய் ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாகவும், இந்த படத்தில் எனக்கு முழு சுதந்திரத்தை விஜய் சார் கொடுத்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
குறிப்பாக இடைவெளி காட்சிகள் எல்லாம் புதிய முயற்சியை தங்கள் கையாண்டு இருப்பதாகவும் தான் செய்யாதது ஒன்றை செய்து இருப்பதால் அதனை மக்களிடம் காட்ட மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜன் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் போன்று மாஸ் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தருவார் என எதிர்பார்த்த நிலையில் விஜய் வைத்து சோதனை செய்திருப்பது விஜய் ரசிகர்களை வேதனை தந்துள்ளது.
ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் விஜய் வைத்து சோதனை செய்கிறேன் என்ற ஒரு படத்தில் எடுத்து அது விமர்சன ரீதியாக பெரும் அடி வாங்கியது. தற்போது லியோ திரைப்படத்திலும் அதே போன்று ஒரு முயற்சியை லோகேஷ் கனகராஜ் செய்திருப்பது படம் ஓடுமா ஓடாதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஏற்கனவே லியோ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது இது சோதனை முயற்சிக்கான திரைப்படம் என்று லோகேஷ் கனகராஜ் கூறிவிட்டதால் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.