Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாகமலுடன் நடிக்கிறார் மன்சூர் அலி கான்.. கோகேஷ் கனகராஜ் திட்டம்

கமலுடன் நடிக்கிறார் மன்சூர் அலி கான்.. கோகேஷ் கனகராஜ் திட்டம்

- Advertisement -

90ஸ் கிட்ஸ்களுக்கு மன்சூர் அலிகான் பயமுறுத்தும் வில்லனாக தான் தெரியும். ஆனால் இப்போதுள்ள 2k கிட்ஸ்க்கு மன்சூர் அலிகான் மகிமை குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால் 2k கிட்சுக்கு மன்சூர் அலி கானை சேர்த்த பெருமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கே சேரும். மன்சூர் அலி கானின் தீவிர ரசிகரான லோகேஷ், தனது கைதி திரைப்படத்தில் அவரை வைத்து தான் எடுக்க இருந்ததாக பல்வேறு பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்கு மன்சூர் அலி கானை லோகேஷ் கனகராஜுக்கு பிடிக்கும். மேலும் விக்ரம் திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடனமாடிய ஒரு பாடலை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார்.இதனை அடுத்து அந்த பாடல் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றது. மன்சூர் அலிகான் செய்கை, பழக்கவழக்கம், பேச்சு என அனைத்தும் தமக்கு பிடிக்கும் என்று பலமுறை பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும் ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் அதற்கான ஒரு வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. கைதி 2 மற்றும் விக்ரம் 2 திரைப்படங்களில் மன்சூர் அலி கானை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்சூர் அலி கானை இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் அணுகி படத்தில் நடிக்க கேட்டதாகவும், அதற்கு மன்சூர் அலிகான் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து 90ஸ் கிட்ஸ்களை பயமுறுத்திய வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் மீண்டும் திரைக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.தற்போது சினிமாவை விட்டு விலகி நிற்கின்ற மன்சூர் அலிகான் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தற்போது சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

Most Popular