Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅர்ஜுன் தாஸ் உடன் காதல் கிசுகிசு! முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி

அர்ஜுன் தாஸ் உடன் காதல் கிசுகிசு! முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி

தமிழ் சினிமாவுக்கு பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் மூலம் பூங்குழலியாக அறிமுகம் ஆகியவர்  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . இவர் 2017 ஆம் ஆண்டு  வெளியான ஞ்சண்டுகளுடே நாட்டில் ஓரிடவேல  என்ற திரைப்படத்தில்  நிவின் பாலிக்கு  கதாநாயகியாக அறிமுகமானார் .

- Advertisement -

மருத்துவரான இவர்  2014 ஆம் ஆண்டு முதல்  மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார் . அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் முயற்சி செய்து  இன்று தமிழ் மற்றும் மலையாள திரையுலகில்  முன்னணி கதாநாயகியாக  வலம் வந்து கொண்டிருக்கிறார் .

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி படத்திலும்  விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . கைதி படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகியவர்  அர்ஜுன் தாஸ் . அந்தப் படத்தில் தனது கம்பீரமான குரலாலே மிரட்டி இருப்பார் . இவரது குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது . அதனைத் தொடர்ந்து அந்த  காரம்  என்ற  வெப் சீரியஸிலும் நடித்திருந்தார் . லோகேஷ் இயக்கிய மாஸ்டர் மற்றும்  விக்ரம் படங்களிலும்  முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தவர் .

- Advertisement -

இவரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும்  நல்ல நண்பர்கள் . இந்நிலையில் நேற்று இவருடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை  ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருந்தார் . இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலர்கள் என்று  ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரல் செய்து வந்தனர்  இதனால் கோலிவுட் வட்டாரத்தில்  கிசுகிசு வேகமாக பரவியது.

- Advertisement -

இதனால் அதிர்ச்சி விட்டு ஐஸ்வர்யா லட்சுமி  இன்று அந்தப் புகைப்படத்திற்கு  விளக்கம் அளித்து ஒரு பதிவை பதிந்துள்ளார் . அதில்  நானும் அர்ஜுன் தாசும் நல்ல நண்பர்கள் . ஒரு நண்பராக நான் அவரை சந்திக்க கூடாதா ? எங்கள் இருவருக்கும் இடையில்  நட்பை தவிர வேறு எதுவும் இல்லை . ஒரு நண்பரை சந்தித்ததை தான் நான் பதிவிட்டிருந்தேன் . நேற்றிலிருந்து  எனக்கு மெசேஜ்  செய்து கொண்டிருக்கும்  ரசிகர்கள்  எல்லோருக்கும் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்  நீங்கள் நிச்சயமாக ஒரு விஷயத்தை  தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்  அவர் என்றுமே உங்களுக்கானவர் தான் என்று  அந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது . இதன் மூலம்  கோடம்பாக்கம் வட்டாரங்களில் வேகமாக பரவி வந்த வதந்திக்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளார்  ஐஸ்வர்யா லட்சுமி .

Most Popular