Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅடேங்கப்பா..மாளவிகா மோகனுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் நபர் யார்?.. இன்ஸ்டாகிராமில் வைரலான போட்டோ!

அடேங்கப்பா..மாளவிகா மோகனுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் நபர் யார்?.. இன்ஸ்டாகிராமில் வைரலான போட்டோ!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் சூப்பர் ஸ்டார் மற்றும் சசிகுமார் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கன்னடம் மலையாளம் தமிழ் மற்றும் ஹிந்தி என இந்திய சினிமாவில் அறியப்படும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்தத் திரைப்படம் நிச்சயமாக இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை பாலிவுட் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன கே.யூ மோகன் . மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தனது பூர்வீகமான கேரளாவில் தான் தற்போது வசித்து வருகிறார் .

தனது சமூக வலைதள பக்கத்தை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் மாளவிகா மோகனன் தனது அன்றாட நிகழ்வுகளையும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருபவர் . இவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் மட்டும் 3.8 மில்லியன் பார்வையாளர்கள் இவரை பின்தொடர்கின்றனர் . அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் .

- Advertisement -

இந்நிலையில் நேற்று மாளவிகா மோகன் அண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் . இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்ததும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது . மேலும் இந்த புகைப்படத்துடன் நீண்ட ஒரு செய்தியையும் பகிர்ந்து இருந்தார் . அந்த செய்தியில் தனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் . வெளியே இருந்து பார்ப்பதற்கு முரடான ஆளாக இருந்தாலும் மனதால் மிகவும் அன்பானவர் எனவும் குறிப்பிட்டு இருந்தார் . இந்தப் பதிவை தொடர்ந்து மாளவிகா மோகனனுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது .

- Advertisement -

மாளவிகா மோகனனுடன் அந்தப் புகைப்படத்தில் நெருக்கமாக இருக்கும் நபர் பெயர் அபினவ் சிங் ஹிந்தி சினிமாவில் தயாரிப்பாளர் எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இதுவரை திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் நான்கு குறும்படங்களை தயாரித்திருக்கிறார் . அதில் இரண்டு குறும்படங்களை அவரை இயக்கியிருக்கிறார் . மேலும் 6 குறும்படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார் . இவரும் மாளவிகா மோகனனும் நெருங்கிய நண்பர்கள் என்பதும்

குறிப்பிடத்தக்கது .

Most Popular