சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது பலதரப்பட்ட சின்னத்திரை ரசிகர்களாலும் ரசித்து கொண்டாடப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் சமையலோடு சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைகளும் அவர்கள் செய்யும் காமெடிகளும் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். ஏராளமான ரசிகர்களை கொண்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி . தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது ஜீசஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரபல சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஐயோ நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை ரஞ்சன் தொகுத்து வழங்கி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4 ஜனவரி 28ஆம் தேதி துவங்கி ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .
கடந்த சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் புகழ், மணிமேகலை, குரேஷி சுனிதா தங்கதுரை ஆகியோர் அவர். இவர்களுடன் தற்போது புதிய கோமாளிகளான சிவாங்கி ஜி பி முத்து சிங்கப்பூர் தீபன் ரவீனா மோனிஷா ஓட்டேரி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி என்னுடைய சிறப்பம்சமே சமையல் கலையுடன் சேர்ந்த நகைச்சுவைதான் ஒரு பக்கம் சமையல் கலைஞர்கள் தங்களது சமையல் திறமைகளை காட்ட மறுபுறம் கோமாளிகள் தங்களது சேட்டைகளையும் நகைச்சுவைகளையும் நிகழ்த்திக்காட்டுவது தான் குப்பை கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பு. சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோரின் காமெடிகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து வைத்திருப்பவர் மணிமேகலை . குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை செய்யும் சேட்டைக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களாக சிருஷ்டி டாங்கே , மைம் கோபி , சிவாங்கி, ஆண்ட்ரியா, காளையன் வி.ஜே விஷால் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியாளர்களில் எலிமினேஷன் முறையில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நீக்கப்படுவார்கள். இறுதிவரை களத்தில் இருக்கும் போட்டியாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார. நல்ல சமையல் டிப்ஸ்களுடன் அவர்கள் செய்யும் காமெடியும் பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கும்படி இருக்கும் . இதற்கென்றே குக் வித் கோமாளி சீசன் 4 ஐ பார்க்க மிகப்பெரிய சின்னத்திரை ரசிகர் கூட்டம் இருக்கிறது .
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கியமானவர் தொகுப்பாளர் மணிமேகலை. விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். இவர் அந்த நிகழ்ச்சிகளின் போது அணிந்து வரும் கெட்டப்கள் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றன. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தோற்றங்களில் வித்தியாசமான வேடங்களுடன் வந்து தன்னுடைய காமெடி ஆள் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி இருந்தவர் மணிமேகலை. இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது இதுதான் என்னுடைய கடைசி நிகழ்ச்சி என அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிர்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து செய்தி வெளியிட்டு இருந்த அவர் நானே வருவேன் கெட்டப்பில் வந்து மீண்டும் வரமாட்டேன் என பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு விதமான யூகங்களும் கணிப்புகளும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அது குறித்து பதில் அளித்து இருக்கிறார். மணிமேகலை. இந்த பேட்டியில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிகவும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார். ஏன் சீசன் நாளிலிருந்து விலகினார் என்ற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவரை தொடர்ந்து குரேஷி என்பவரும் விலகியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின்றன ஆனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.