விஷால் – கமர்ஷியல் கிங் ஹரி காம்போவில் உருவாகி இன்று உலகெங்கும் வெளியான திரைப்படம் ரத்னம். கடந்த ஆண்டு மார்க் ஆன்டனி திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளி விஷாலின் கேரியரில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதனை அடுத்து வரும் விஷால் படம் இது தான்.
விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தேவி ஶ்ரீ பிரசாத் பின்னணி இசையில் உருவாகியது ரத்னம். ரீலீஸ்க்கே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த இத்திரைப்படம் திரையரங்குகளின் சிறிய ஸ்கிரீங்களில் தான் இன்று வெளியானது. அதற்குக் காரணம் விஜய்யின் கில்லி திரைப்படத்தின் மெகா ஹிட் கலெக்ஷன்.
பொதுவாக இயக்குனர் ஹரியின் படம் என்றாலே ஒரு மினிமம் கியாரண்டி என்றே சொல்லலாம். நல்ல காமெடி, பாடல்கள், குடும்பக் காட்சிகள், ஆக்க்ஷன் என ஓர் நல்ல கமர்ஷியல் படமாகவே இருக்கும். இரு ஆண்டுகள் முன்னர் வெளியான யானை படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் ஈட்டியது. ஆனால் ரத்னம் படம் அதில் அனைத்திலும் கோட்டை விட்டு மக்கள் மத்தியில் சற்று இளுவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
சமுத்திரகனியிடம் அடியாளாக வேலை செய்யும் விஷால் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரைக் காப்பாற்ற எதிரி கும்பலுக்கு எதிராகவே சண்டை செய்வது தான் இப்படத்தின் கதைக்களம். கதையும் அதன் திரைக்கதையும் பார்வையாளர்களிடம் எந்த ஒரு வரவேற்பைப் பெறவில்லை. படம் முழுக்க முழுக்க விஷாலை சுற்றி மட்டுமே நடப்பது போல அமைந்தது. ஹரியின் படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வையே கொடுக்கவில்லை என பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
ஹரியின் படங்களிலேயே ரத்னம் தான் மிகவும் சுமாரான படமாக இருக்கக்கூடும். இருப்பினும் முதல் நாள் ஓரளவு வசூல் வந்துள்ளது. விஜய்யின் கில்லி பக்கம் தெறிக்கும் வேகத்தில் வசூலை ஈட்டி வருவது ரத்னம் படத்துக்கு முட்டுகட்டாக விளங்கி அதன் வசூலை கெடுக்கிறது. இது நடிகர் விஷாலை சங்கடமாக்கியுள்ளது.