சினிமா

அயோத்தி படத்துக்கு மட்டும் வாங்க.. டிக்கெட் காசு நான் தரேன்..! பிரபல விமர்சகர் அறிவிப்பு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகராக விளங்கியவர் நடிகர் சசிகுமார். அவர் நடித்த படங்கள் எல்லாம் குறைந்தது 100 நாட்கள் ஆவது ஓடிவிடும். அதுவும் தென் தமிழகத்தில் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தார்கள்.

Advertisement

சுப்ரமணியபுரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக அவதாரம் எடுத்து தனக்கென தனி பெயரை சசிகுமார் பெற்றிருந்தார். எனினும் தொடர்ந்து மோசமான கதை தேர்வுகள் காரணமாக ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் சசிகுமார் தவித்து வந்தார்.

சொல்லப்போனால் சசிகுமார் நடித்த படம் வந்ததே தெரியாமல் தியேட்டர் விட்டுப் போன காலம் கூட இருந்தது. இந்த நிலை தற்போது சசிகுமார் அயோத்தி படத்தின் மூலம் ஒரு பெரிய கம் பேக் கொடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களில் பிரபுதேவாவின் பகிரா நன்கு விளம்பரப்படுத்தப்பட்டாலும் அது ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Advertisement

ஆனால் அத்துடன் ரிலீசான அயோத்தி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. எனினும் போதிய விளம்பரம் இன்மை காரணத்தால் அந்த படம் பெரிய அளவில் மக்களிடையே செல்லவில்லை.

இந்த நிலையில் படத்தைப் பார்த்த பலரும் அயோத்தி நடப்பு ஆண்டின் சிறந்த படமாக இருப்பதாக பாராட்டி இருக்கிறார்கள். சசிகுமார் நடித்த படத்திலே இதுதான் பெஸ்ட் எனவும் கூறியிருக்கிறார்கள். படம் பேசிய விஷயமும் ,படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் மனதில் நிற்பதாக பலரும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சக்தி என்ற நபர் அயோத்தி படத்தை என்னுடைய ட்விட்டர் பாலோவர்ஸ்களுக்கு ஐந்து டிக்கெட் இலவசமாக தருகிறேன். படத்தை நேரில் சென்று பாருங்கள் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பிரபல விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி, கோயமுத்தூரில் தற்போது  அயோத்தி படத்தை பார்க்க இருப்பதாகவும், இந்த ட்விட்டை பார்த்து விட்டு நேராக ரசிகர்கள் வந்தால் அவர்களுக்கான டிக்கெட் எனது சொந்த காசு நானே எடுத்து தருகிறேன் என்று கூறியிருந்தார்.

இதனைப் பார்த்து சுமார் 25 பேர் திரையரங்குக்கு சென்றனர். இதை எடுத்து 25 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரசாந்த் ரங்கசாமி, அயோத்தி படத்திற்கான டிக்கெட்டையும் வழங்கி படத்திற்கு ஆதரவு வழங்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அயோத்தி படத்தை மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top