Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய்யுடன் கோட் படத்தில் நடிக்கிறாரா தல தோனி.. இதற்காக தான் ஸ்டேடியத்தில் க்லைமாக்ஸா ? லேட்டஸ்ட்...

விஜய்யுடன் கோட் படத்தில் நடிக்கிறாரா தல தோனி.. இதற்காக தான் ஸ்டேடியத்தில் க்லைமாக்ஸா ? லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது.. !

தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் திரைப்படம் கோட். அக்டோபர் மாதம் முதல் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் இரு வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இறுதியில் தோனி நடித்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.

- Advertisement -

கோட் படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங் இரு வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் கேரளா வருகிறார் என்பதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். விஜய்யும் ரசிகர் பட்டாளதுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக்கினார்.

கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கோட் படத்தின் இறுதிக் கட்சியை எடுத்தார் வெங்கட் பிரபு. முதலில் சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ஐ.பில்.எல் தொடரின் காரணமாக கேரளாவுக்கு மாற்றப்பட்டது. இந்த செய்திக்கு பிறகு தான் தோனி விஜய்யுடன் நடிக்கிறார் எனத் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் போது தல தோனியும் விஜய்யும் ஒன்றாக இணைந்து ஃபோட்டோக்கள் வெளியிட்டனர். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் தீவிர தோனி ரசிகர் என்பதால், உடனே கோட் படத்தில் தோனி கவுரவ தோற்றம் அளிக்கிறார் எனச் செய்திகளை பரப்பினர். ஆனால் உண்மையில் அவ்வாறு எதுவும் இல்லை. படக்குழுவே இதனை அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளது.

- Advertisement -

கோட் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் வெளிநாட்டில் கடைசி ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு நகரவுள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முதல் பாடம் நிச்சயம் ஏப்ரல் மாதம் வரும் என கல்பாத்தி அகோரம் உத்தரவாதம் அளித்துள்ளார். யுவன் இசையில் விஜய்யின் குரலில் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேஅளவில்தான் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதுவரை போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தான். முதல் முறையாக தளபதி விஜய்யை யாரும் காட்டாத வகையில் வெங்கட் பிரபு காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular