Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதியின் லியோ திரைப்பட பற்றி மிஷ்கின் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் .. வைரல் வீடியோ!

தளபதியின் லியோ திரைப்பட பற்றி மிஷ்கின் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் .. வைரல் வீடியோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய் . இவரது லியோ திரைப்படம் தற்போது பரபரப்பாக படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது . வருகின்ற அக்டோபர்  மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் திரிஷா,அர்ஜுன்,மன்சூர் அலிகான்,சஞ்சய் தத் இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்

- Advertisement -

மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் லியோ திரைப்படம் விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து கொண்டிருக்கிறது . டியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளும் வெகு விரைவிலேயே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் சமீப காலமாக அரசியலை குறிவைத்து காய் நகர்த்தி வரும் விஜய் தளபதி 68 திரைப்படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது .

இது போன்ற கருத்துக்களில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கும் என்று தெரியவில்லை சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டங்கள் தோறும் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்தினர் அதில் தளபதி கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் உரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இது தளபதியின் அரசியல் வருகைக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது .

- Advertisement -

இது எப்படி இருந்தாலும் ரசிகர்களின் இப்போதைய தேவை லியோ திரைப்படத்தின் அப்டேட் பற்றியதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட இந்த திரைப்படத்திலிருந்து தளபதி விஜய் பாடிய நான் ரெடியா என்ற பாடல் வெளியாக்கி ரசிகர்களிடம் இருந்த வரவேற்பு பெற்றது . இந்தப் பாடலுக்குப் பிறகு திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது . லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் தளபதிக்கு எவ்வளவு மாஸ் வைத்திருக்கிறார் என ரசிகர்கள் பார்க்க உடன் இருக்கின்றனர்.

- Advertisement -

லியோ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் விஜய் ரசிகர்களுடன் கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது அந்த வீடியோவில் தளபதி ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் மிஷ்கின் லியோ திரைப்படத்தை பற்றிய ஒரு சில அப்டேட்டுகளையும் கொடுத்திருக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் அவர் தளபதி விஜயை போன்று ஜென்டில்மேன் ஆக இருங்கள் விஜய் ரசிகர்களாகிய உங்களுக்கு சமூகத்தில் நிறைய பொறுப்பு இருக்கிறது என்று கூறினார் . மேலும் ரசிகர்கள் அவரிடம் இல்லையோ அப்டேட் பற்றி கேட்டதற்கு அந்தப் படத்தில் தான் ஒரு சின்ன வில்லன் கதை பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார் . இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .

Most Popular