Entertainment

மீண்டும் இணையும் நானே வருவேன் கூட்டணி ! புதுப்பேட்டை 2 படத்திற்கான பிளானா ?

Selvaraghavan Dhanush Pudhupettai 2

கலைப்புலி எஸ் தானு ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் வி கிரியேஷன்ஸ் மற்றும் கலைப்புலி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆகிய இரண்டு நிறுவனங்களின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று உள்ளன. அவற்றில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 10 இடங்களில் உள்ளன.

Advertisement

அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் ஒரு பிலிம்கேர் விருது போன்ற தென்னிந்திய விருதுகள் பலவற்றை வென்றுள்ளார்.

மேலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் கலைபுலி எஸ்.தானு வழங்கும் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கை ஊடக ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றி நடைபோடுகிறது.

Advertisement

மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தானு அவர்கள் நேரில் சென்று இயக்குனர் செல்வராகவன் அவர்களை சந்தித்து ஆளூயர மாலை அணிவித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் செல்வராகவன் மற்றும் தனுஷ் மற்றும் இயக்குனர் கலைப்புலி தானு ஆகிய மூவரின் காம்போவில் வெளியான புதுப்பேட்டை படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இம்மூவரின் காம்போ அடுத்த படத்தில் இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்பு புதுப்பேட்டை 2 படத்திற்கான சந்திப்பாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top