Friday, October 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு.. பதிலாக வேறொரு பெரிய நடிகை ஒப்பந்தம்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு.. பதிலாக வேறொரு பெரிய நடிகை ஒப்பந்தம்..!

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே.பாலாஜி ஓர் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகனாக மட்டுமல்லாமல் கதையாசிரியராகவும் எல்.கே.ஜி படத்தின் மூலம் அறிமுகமானார். எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகியப் படங்களில் கூடுதல் பொறுப்பாக இயக்குனராக செயல்பட்டார்.

- Advertisement -

இந்த மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மூக்குத்தி அம்மன் படத்தின் 2ஆம் பாகம் உருவாகுவதாக பல மாதங்கள் முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிப்புகள் வரவில்லை. வழக்கமான தெய்வப் படமாக இல்லாமல் காமெடியோடு நல்ல கருத்துக்களையும் படத்தில் சேர்த்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.

கடவுளின் பெயரில் நிலங்களை ஆக்கிரமிப்பது, மக்களை ஏமாற்றி காணிக்கையாக பணத்தை வாங்குவது போன்றவற்றை குத்திக் காட்டி எது பக்தி எது போலி என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டபட்டிருந்து. கொரோனா டைமில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர்.

- Advertisement -

அம்மனாக வந்த நயன்தாரா படத்திற்கு பெரிய பலமாக செயல்பட்டார். இவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி காம்போ மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது அவர்கள் அடுத்த பாகத்தில் கானபடமாட்டார்கள் என்பது படத்திற்கு சிறிய பின்னடைவு தான். மேலும் இதனால் படத்தில் மற்றொரு டுவிஸ்ட்.

- Advertisement -

அதாவது நயன்தாரா இல்லாததால் எப்படி மூக்குத்தி அம்மன் 2 என அதனை அழைப்பது என்பதால் வேறொரு பெயரை இப்படத்திற்கு வைக்க நினைக்கிறார்கள். நயன்தாராவுக்கு பதிலாக மற்றொரு பெரிய நடிகை உள்ளே வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை நயன்தாராவுக்கு சமமாக இருக்கும் த்ரிஷா தான். த்ரிஷா முதன் முறையாக அம்மன் வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேளைகளில் தீவிரமாக உள்ளார். தானே எழுதி இயக்கும் மூன்றாவது படமாக இது அமையும். இப்படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular